கேஜிஎப் என்ற பிரமாண்ட படத்தை மக்களுக்கு கொடுத்த இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக நடிகர் பிரபாஸை வைத்து “சலார்” என்ற படத்தை இயக்கி வருகிறார். இவர் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் இரண்டு பாகங்களாக வெளியான கேஜிஎப் 1, கேஜிஎப் 2 படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூலை குவித்தது.
இதில் கேஜிஎப் 2 திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று 1000 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் பிரசாந்த் நீல் “சலார்” என்ற டான் கதையை கொண்ட படத்தை இயக்குகிறார்.
இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசனும், வில்லனாக மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் நடித்து வருகிறார். நடிகர் ஜெகபதி பாபுவும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
படத்தை ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, படத்திற்கு இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு தற்போது விறு விறுப்பாக மும்பையில் நடைபெற்று வருகிறது. படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு கொண்டு வர படக்குழு தீவிரமாக உள்ளனர்.
இந்த நிலையில், இப்படத்தில் கேஜிஎப் ராக்கி பாய் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமான யாஷ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. இதற்கு முன்பு வெளியான கேஜிஎப்1,2 தற்போது உருவாகும் சலார் இந்த இரண்டு படங்களுமே “டான்” கதைக்களத்தை கொண்டது என்பதால், “சலார்” படத்தில் “கேஜிஎப்” ராக்கி பாய் கதாபாத்திரத்தை பிரசாந்த் நீல் இணைத்துள்ளதாகச் சொல்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…