லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பஹத் பாசில், சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஜூன் 3-ஆம் தேதி வெளியான திரைப்படம் ” விக்ரம்”. இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று தமிழகத்தில் மட்டும் 175 கோடிக்கு மேலும், உலகம் முழுவதும் 400 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
படம் வரும் ஜூலை 8-ஆம் தேதி டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள நிலையில், இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கிறது. ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார்.
படத்தில் நடித்த நடிகர்கள் எவ்வளவு சிறப்பாக நடித்திருந்தார்களோ, அதை அளவிற்கு இசையமைப்பாளர் அனிருத்தும் பின்னணி இசையில் பூந்து விளையாடி இருப்பார். குறிப்பாக, விஜய் சேதுபதி வரும் அறிமுக காட்சி, சூர்யா வரும் காட்சிகளில் பின்னணி இசையாலே மெய் சிலிர்க்க வைத்திருப்பர் அனிருத்.
இந்த நிலையில், படத்தின் OST எப்போது வெளியாகும் ரிங்க் டோனை மாற்ற காத்திருக்கும் ரசிகர்களுக்கு அனிருத் ஒரு அப்டேட்டை கொடுத்துள்ளார். அதன்படி, விக்ரம் படத்தின் OST ஜங்க் பாக்ஸ் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் தற்போது உற்சாகத்தில் உள்ளனர்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…