ஒரு திரைப்படம் வெளியாகி வெற்றிபெறுவதற்கு இசை எவ்வளவு முக்கியம் என்பது அனைவர்க்கும் தெரியும். அந்த இசை மிகவும் ரசிகர்களுக்கு பிடித்தவாறு வழங்க இசையமைப்பாளர்கள் தீவிரமாக வேலை செய்வார்கள். அப்படி தான் அனிருத்தும் கூட, சமீப கமலமாக இவரது இசையில் வெளியாகும் படங்கள் மற்றும் பாடல்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றுவிடுகிறது.
இதனாலேயே அனிருத்துக்கு பெரிய பட்ஜெட் படங்களே குவிந்து வருகிறது. இதுவரை 27 படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கும் அனிருத் சிவகார்த்திகேயனுக்கு மட்டுமே 7 படங்களுக்கு இசைமைத்துள்ளார். இதனையடுத்து மீண்டும் 8-வது முறையாக அனிருத் சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி, இயக்குனர் ராஜ்குமார் பெரிய சாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள 21-வது படத்தை நடிகர் கமல்ஹாசன் தான் தயாரிக்கவுள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்கவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூட கடந்த மாதம் வெளியானது.
ஆனால், படத்திற்கு யார் இசையமைக்க போகிறார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. இதனையடுத்து, இந்த படத்திற்கும் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே, இவர்களது கூட்டணியில் வெளியான எதிர்நீச்சல், காக்கி சட்டை, மான் கராத்தே, வேலைக்காரன் , டாக்டர், டான் ஆகிய படங்களின் பாடல்கள் மற்றும் படம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…