மல்லுவுட்டில் கால்பதிக்கும் ராக்ஸ்டார் அனிருத்.! அப்போ கோலிவுட் நிலமை.?
தமிழ் சினிமாவில் சமீப காலமாக பல ஹிட் பாடலை கொடுத்தது தற்பொழுது கலக்கி வருபவர் அனிருத். இவரது இசையில், கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த “விக்ரம்” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தில் இடம் பெற்ற அனைத்து தீம் மற்றும் பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
இந்த படத்தை தொடர்ந்து தற்போது தமிழில் திருச்சிற்றம்பலம், ஜெயிலர், இந்தியன் 2, AK62 உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதில் திருச்சிற்றம்பலம் படத்திலிருந்து வெளியான அணைத்து பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.
இதையும் படியுங்களேன்- அட்டகாசமான போஸ்…. விருமன் நாயகியின் அசத்தலான புகைப்படங்கள்..!
இதை தவிர்த்து பாலிவுட்டில் அட்லீ இயக்கத்தின் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் “ஜவான்” திரைப்படத்திற்கும் இசையமைப்பாளர் அனிருத் தான் இசையமைத்து வருகிறார். அதற்கான டீசர் கூட கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி இசை பெரிதளவில் பேசப்பட்டது.
கோலிவுட், பாலிவுட் என இரண்டிலும் கலக்கி வரும் அனிருத் தற்பொழுது மல்லுவுட்டிலும் களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது அதன்படி, ஹனீப் அதேனி இயக்கும் ஒரு படத்தில் நிவின் பாலி ஹீரோவாக நடிக்கவுள்ளார். அந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் தான் இசையமைக்கவுள்ளாராம்.
இந்த படத்திற்கு இசையமைப்பதன் மூலம் அனிருத் மல்லுவுட்டில் அறிமுகமாகவுள்ளார். இதனையடுத்து, அங்கேயும் ஹிட் பாடலை கொடுக்க அவரது ரசிகர்கள் இணையத்தில் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அனிருத் மல்லுவுட்டுக்கு போயிட்டா கோலிவுட் நிலைமை என்ன ஆகிறது என்ற கேள்வியும் எழும்பியுள்ளது.