சமீப காலமாக, பல பெரிய தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்பு ஹைதராபாத் போன்ற வெளிநாடுகளில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் “AK61”-படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.
unknown nodeஇதனையடுத்து, தமிழகத்தில் படப்பிடிப்பு நடைபெறாததால் பெப்சி தொழிலாளர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி அஜித்திற்கு நேரடியாக கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
unknown nodeஇது குறித்து அவர் கூறியது” நடிகர் அஜித் குமாரிடம் நேரிடையாக கோரிக்கை வைக்கிறோம், தொடர்ச்சியாக ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடத்தி வருவதால் இங்கு இருக்கும் பெப்சி தொழிலாளர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர் எனவே சென்னையில் படப்பிடிப்பு நடத்த வேண்டும் ” என தெரிவித்துள்ளார்.