rj balaji and vijay [File Image]
நடிகர் ஆர்.ஜே.பாலாஜி அடுத்ததாக இயக்குனர் கோகுல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சிங்கப்பூர் சலூன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், படத்தின் ப்ரோமோஷனுக்காக ஆர்.ஜே. பாலாஜி பேட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஆர்.ஜே.பாலாஜி விஜய்யுடன் இணைந்து படம் செய்வேன் என நம்புவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” நான் விஜய்யை சந்தித்து ஏற்கனவே ஒரு கதை சொன்னேன். என்னுடைய குழுவிடம் பேசிக்கொண்டு ஒரு கதையை விஜய் சாரிடம் சொன்னேன். அவரும் கதையை கேட்டு விட்டு நன்றாக இருக்கிறது என்று சொன்னார்.
மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகும் பருத்திவீரன்?
நான் சொன்ன கதை வாரிசு மற்றும் லியோ படங்களில் நடிப்பதற்கு முன்பு. கதையை கேட்டுவிட்டு ஏப்ரல் மாதம் படமாக்கலாமா என்று கேட்டார். எனக்கு சற்று பயமாக இருந்தது பிறகு நான் சொன்னேன். என்னுடைய சொந்தப் படங்களுக்குக் கூட ஸ்கிரிப்ட் வேலை செய்ய குறைந்தபட்சம் 6 மாதங்கள் ஆகும் பெரிய படம் எடுக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக எனக்கு இன்னும் நேரம் வேண்டும்என்று அவரிடம் சொன்னேன்.
அவரைப் போன்ற ஒரு பெரிய நடிகரை வைத்து நான் படம் செய்கிறேன் என்றால் கண்டிப்பாக நான் அவருக்கு சிறந்ததைக் கொடுக்க வேண்டும். எனவே, கண்டிப்பாக கதையை சரியாக எழுதிவிட்டு நான் அவரிடம் சென்று கதையை கூறுவேன்” எனவும் ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…