இயக்குனரும், நடிகருமான ஆர். ஜே. பாலாஜி கடைசியாக வீட்ல விசேஷம் படத்தை அவரே இயக்கி அவரே நடித்திருந்தார். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஆர். ஜே. பாலாஜி நடிக்கவுள்ள படத்திற்கான அறிவிப்பு பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியாகியுள்ளது.
நேற்றே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை லோகேஷ் கனகராஜ் இன்று நடைபெறும் இந்தியா vs இங்கிலாந்து கிரிக்கெட் போட்டியின் நடுவில் வெளியிடுவார் என்று வேல்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. ஏனெனில் ஆர்.ஜே.பாலாஜியும் அந்த கிரிக்கெட் போட்டியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிலையில், நேற்று தற்போது அறிவிக்கப்பட்டது போல ஆர்.ஜே.பாலாஜி நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு “சிங்கப்பூர் சலூன்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்குனர் கோகுல் இயக்குகிறார்.
கையில் மூடி வெட்டும் பொருட்களுடன் வித்தியாசமான லுக்கில் ஆர்.ஜே.பாலாஜி இருப்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. மேலும் மற்றோரு தகவல் என்னவென்றால், இந்த படத்தில் லோகேஷ் கனகராஜ் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை போல கெத்தான கேமியோ ரோலில் வரவிருக்கிறாராம். இதற்கு முன்பு கடைசியாக மாஸ்டர் படத்தில் க்ளைமாக்ஸ் காட்சியில் 1 நிமிடம் மற்றும் லோகேஷ் கனகராஜ் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொச்சி : கேரளா மாநிலம் கொச்சியில் பாலாரிவட்டம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கலூர் மைதானத்தில் நடிகை திவ்யா உன்னி…
கோவை : கேரளா மாநிலம் கொச்சினில் இருந்து கோவைக்கு சமையல் எரிவாயு எடுத்து வந்த டேங்கர் லாரியானது கோவை அவினாசி…
சென்னை : ஆண்டுதோறும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை வழங்கும்.…
சிட்னி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில்…
சென்னை: இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10 ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என முன்னதாக…
கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் அரசு பேருந்து கட்டணம் 15% உயர்த்தப்படுவாக அம்மாநில போக்குவரத்துத்துறை அறிவித்துள்துய. அனைத்து மாநில சாலை போக்குவரத்து…