அந்த மாதிரி காட்சியில் தயக்கம்…’எனக்கில்ல ஹீரோக்கு’! ரியா சுமன் ஓபன் டாக்!!
Riya Suman மன்மத லீலை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ரியா சுமன். இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஹிட்லர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனையடுத்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் ரியா சுமன் கலந்து கொண்டிருந்தார்.
read more- சாய் பல்லவி பெயரில் பண மோசடி? வழக்கு தொடர்ந்ததா ‘RBI’? உண்மை இதோ!!
அந்த பேட்டியில் ஹிட்லர் படத்தில் நடித்த அனுபவம் பற்றியும் படம் பற்றியும் நடிகை ரியா சுமன் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” நான் பெரிய அளவில் தமிழ் படங்களில் நடிக்காத காரணமே தெலுங்கு சினிமா பக்கம் ஆர்வம் காட்டியது தான், அந்த பக்கம் ஆர்வம் காட்டி கொண்டிருந்ததால் என்னால் தமிழில் கவனம் செலுத்த முடியவில்லை.
இருப்பினும் நான் சிறிய வயதில் இருந்தே தமிழை கேட்டு வளர்ந்தவள். தமிழ் படங்களை அதிகமாக பார்த்து இருக்கிறேன். எப்போதுமே தமிழ் சினிமாவை நான் கவனித்து கொண்டு தான் இருக்கிறேன். ஹிட்லர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு வரவில்லை. வேறு நடிகை தான் இந்த படத்தில் நடிக்க கமிட் ஆகி இருந்தார். கடைசி நேரத்தில் எனக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.
READ MORE – கணவர் கூட போனாலே ஏதாவது சொல்றாங்க! நடிகை ஸ்ரேயா சரண் வேதனை!
படத்தின் கதையை கேட்டவுடன் எனக்கு பிடித்திருந்தது. படத்தில் நடித்தேன். இந்த திரைப்படத்தில் நான் சாரா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். படத்தில் திருமணம் செய்து கொள்வது தான் வாழ்நாள் லட்சியம் என்ற ஒரு காதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன். கண்டிப்பாக படம் அனைவர்க்கும் பிடிக்கும் வெளியானதும் பாருங்கள்.
READ MORE – இளையராஜாவாக நடிக்க தனுஷ் கேட்ட சம்பளம்? அதிர்ந்து போன கோலிவுட் வட்டாரம்!!
இந்த படத்தில் விஜய் ஆண்டனியுடன் நடித்த அனுபவம் மிகவும் நன்றாக இருந்தது, பொதுவாகவே காதல் காட்சிகள் என்றால் சற்று தயங்குவார். எனக்கு அந்த தயக்கம் எல்லாம் இல்லை. விஜய் ஆண்டனி நடிக்க தயக்கம் காட்டிய காரணத்தால் இயக்குனர் தனா சில காட்சிகளை மாற்றமும் செய்தார்” எனவும் நடிகை ரியா சுமன் தெரிவித்துள்ளார். மேலும் ஹிட்லர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை டீசர் மட்டும் வெளியாகி படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்தது என்பது.