Ritika Singh இறுதிச்சுற்று திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை ரித்திகா சிங். இவர் தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு ஹிந்தி ஆகிய திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் படங்களில் நடிக்க ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே தன்னுடைய கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் கதைகள் மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இப்படி இவர் நடிப்பதால் இவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமும் இருக்கிறது. இருப்பினும் இவருக்கு சமீபகாலமாக பெரிய அளவில் பட வாய்ப்புகள் வரவில்லை என்றே கூறலாம். தற்போது தமிழ் சினிமாவில் இவர் ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்தில் ரித்திகா சிங்கின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்படும் என்று தெரிகிறது. ஏனென்றால், அந்த அளவிற்கு இந்த படத்திற்காக ரித்திகா சிங் தயாராகி வருகிறார். இதனை தவிர்த்து தெலுங்கிலும் சில படங்களில் நடிக்கவும் கமிட் ஆகி வருகிறார். இந்த திரைப்படத்தில் ரித்திகா சிங்கின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்படும் என்று தெரிகிறது. ஏனென்றால், அந்த அளவிற்கு இந்த படத்திற்காக ரித்திகா சிங் தயாராகி வருகிறார். இதனை தவிர்த்து தெலுங்கிலும் சில படங்களில் நடிக்கவும் கமிட் ஆகி வருகிறார்.
கடைசியாக தெலுங்கில் துல்கர் சல்மான் கான் நடிப்பில் வெளியான கிங் ஆப் கோதா படத்தில் ஒரே ஒரு ஐட்டம் பாடலில் நடனமாடி இருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ரித்திகா சிங்கிடம் நீங்கள் எதற்காக சமீபகாலமாக தெலுங்கு படங்களில் நடிக்க வில்லை? பட வாய்ப்பு வரவில்லையா? என்று கேள்வி எழுப்பினார். அனைவருடைய முன்பும் கேள்வி எழுப்பிய காரணத்தினால் சற்று கடுப்பாகி ரித்திகா சிங் பதில் அளித்தார்.
இது குறித்து பேசிய ரித்திகா சிங் ” எனக்கு மனதுக்கு பிடித்திருந்தால் மட்டுமே படம் செய்வேன். மற்றபடி எந்த சூழ்நிலையிலும் செய்ய மாட்டேன். மலையாளம், மராத்தி, ஹிந்தி என எந்த மொழியிலும் கதை, கதாபாத்திரம் பிடித்திருந்தால் மட்டுமே நடிப்பேன். அந்த படத்தில் இருக்கும் படக்குழு எனக்கு சரியாக அமைந்தால் மட்டுமே படத்தை ஒப்புக்கொள்வேன்’ எனவும் நடிகை ரித்திகா சிங் கூறியுள்ளார்.
ஹைதராபாத்: 'புஷ்பா 2' சிறப்புக் காட்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பெண் உயிரிழந்ததற்கு, 'போலீஸ் சொன்னதை மதிக்காமல், அல்லு அர்ஜுன்…
சென்னை: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து, தூத்துக்குடி உட்பட 9 துறைமுகங்களில் நேற்று முன் தினம்…
சென்னை : அண்மையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கியவர்களை பாஜக…
திருவண்ணாமலை : இன்று (டிசம்பர் 21) பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திருவண்ணாமலை சந்தைமேடு பகுதியில் 'உழவர் பேரியக்க மாநாடு'…
திருவள்ளூர் : தமிழ்நாடு ஊர்காவல் படை காவலர்களுக்கான காலிபணியிடங்களை நிரப்பும் அறிவிப்புகள் குறிப்பிட்ட இடைவெளியில் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.…
தெலங்கானா : 'புஷ்பா 2' படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரம் குறித்து, தெலங்கானா முதல்வர்…