தலைவர் 170 படப்பிடிப்பின் போது காயம்! வேதனையில் நடிகை ரித்திகா சிங்!

நடிகை ரித்திகா சிங் சினிமா துறையில் நடிக்க வருவதற்கு முன்பு இருந்தே ஒரு பாக்ஸர் தான். இதன் காரணமாகவே அவருக்கு சுதா கொங்கரா இயக்கத்தில் இறுதிச்சுற்று படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை ரித்திகா சிங் தற்போது ரஜினிகாந்துடன் அவருடைய 170-வது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
ஜெய் பீம் படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான டி.ஜே.ஞானவேல் தான் ரஜினியின் 170-வது திரைப்படத்தை இயக்குகிறார். தற்காலிகமாக தலைவர் 170 என்று இந்த திரைப்படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் தான் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை ரித்திகா சிங் நடித்து கொண்டு இருக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்திற்காக ரித்திகா சிங் கடுமையான உடற்பயிற்சிகளில் எல்லாம் ஈடுபட்டு கொண்டு இருக்கிறார். குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட கடுமையான உடற்பயிற்சி செய்யும் வீடியோ வெளியாகி இருந்தது. அதனை தொடர்ந்து தற்போது அவருக்கு காயம் ஏற்பட்டவாறு வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
அந்த மாதிரி கெட்டப் மட்டும் போடவே மாட்டேன்! நடிகை சரண்யா அதிரடி!
தலைவர் 170 படத்திற்கான படப்பிடிப்பின் போது சண்டை காட்சிகள் எடுக்கப்பட்டு வந்ததாம். அந்த சமயம் தான் நடிகை ரித்திகா சிங்கிற்கு கண்ணாடிகள் உடைந்து தன்னுடைய கைகள் கீறப்பட்டு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. ரத்தம் சொட்ட சொட்ட அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் ” சில சமயம் எது நடக்குமோ அது தான் நடக்கும், பரவாயில்லை நான் கைப்பிடியை விட்டதால் எனக்கு இந்த காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த காயம் காரணமாக என்னால் படப்பிடிப்பில் இப்போது கலந்துகொள்ளமுடியாது. ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் விரைவில் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வேன்” என கூறியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி கொண்டு இருக்கும் நிலையில், ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் கவனமாக இருங்கள் என எச்சரித்து வருகிறார்கள். தலைவர் 170 படத்திற்காக இப்படி கடினமான காட்சிகளில் ரித்திகா சிங் நடித்து வருவதால் கண்டிப்பாக அவருடைய கதாபாத்திரம் பெரிய அளவில் பேச கூடிய வகையில் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
INDvsPAK: கடைசி நேரத்தில் அடுத்தடுத்து சரிந்த பாக்., வீரர்கள்.! பந்து வீச்சில் மிரட்டிய இந்தியா…
February 23, 2025
மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!
February 23, 2025
NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…
February 23, 2025
வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!
February 23, 2025