RIPMarimuthu: மாரிமுத்து மறைவு அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.! நடிகர் சரத்குமார் இரங்கல்..!

sarathkumar

இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார். பிரபல சின்னத்திரை தொடரான ‘எதிர்நீச்சல்’ தொடரில் குணசேகரன் எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன்  மூலம் பிரபலமான இவர், அந்த சீரியலுக்காக டப்பிங் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.

இதன்பிறகு, அவரை அருகில் இருந்த வடபழனி சூர்யா மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். வடபழனி சூர்யா மருத்துவமனையில் உள்ள நடிகர் மாரிமுத்துவின் உடல், சற்று நேரத்தில் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

இன்று மாலை அவரது சொந்த ஊரான தேனியில் பசுமலை பகுதியில் அவருக்கு இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது. இந்நிலையில் மாரிமுத்துவின் திடீர் மறைவு திரைத்துறையில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகர் சரத்குமார் தன்னுடைய இரங்கலைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, “இயக்குனரும், பிரபல குணச்சித்திர நடிகருமான அன்பு நண்பர் மாரிமுத்து அவர்கள் திடீர் மாரடைப்பால் மறைந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. மேஜிக் பிரேம்ஸுடன் இணைந்து தயாரித்த ‘புலிவால்’ திரைப்படத்தில் அவருடன் பணியாற்றிய நாட்களை நினைவுகூறுகிறேன்.”

“வேறு எவராலும் பூர்த்தி செய்ய முடியாத வெற்றிடத்தை உருவாக்கி மறைந்த அவரது பிரிவால் தீராத வேதனையில் வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், கலைத்துறையினர், ரசிகர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்