பிரபல டப்பிங் கலைஞர் ஸ்ரீனிவாச மூர்த்தி மாரடைப்பால் காலமானார்.
ஸ்ரீனிவாச மூர்த்தி :
டப்பிங் கலைஞர் ஸ்ரீனிவாச மூர்த்தி சூர்யா , அஜித், மோகன் லால், ராஜசேகர், விக்ரம் என பல டாப் நடிகர்களுக்கு தெலுங்கில் டப்பிங் பேசியுள்ளார். பல ஆண்டுகளாக சினிமாவில் டப்பிங் கலைஞராக பணியாற்றி வந்த ஸ்ரீனிவாச மூர்த்தி இன்று மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.
இவரது திடீர் மறைவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தெலுங்கு சினிமா பிரபலங்களும், தமிழ் சினிமா பிரபலங்களும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
சூர்யா இரங்கல்
ஸ்ரீனிவாச மூர்த்தி மறைவுக்கு நடிகர் சூர்யாவும் தனது இரங்கலை ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ட்வீட்டரில் கூறியிருப்பதாவது ” இது மிகப்பெரிய தனிப்பட்ட இழப்பு .. ஸ்ரீனிவாசமூர்த்தி உங்களுடைய குரல் மற்றும் உணர்ச்சிகள் தெலுங்கில் என் நடிப்புக்கு உயிர் கொடுத்தது. உங்களை மிஸ் செய்வேன் அன்பே ஐயா! சீக்கிரம் சென்றுவிட்டார்” என வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார். ஸ்ரீனிவாச மூர்த்தி சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் படத்தின் தெலுங்கு மொழிக்கு டப்பிங் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…