ரிஹானா கோபத்தால் கதறிய ஸ்நப் சட்(Snap Chat)!ஒரே நாளில் 1 பில்லியன் டாலர்களை இழந்தது ஸ்நப் சட்(Snap Chat)….

Published by
Venu

பிரபல பாடகி ரிஹானா ஸ்நப் சட் செயலி (Snap Chat App)-இல் வெளியான தன்னை குறித்த மோசமான விளம்பரத்திற்கு  எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்ட நிலையில், ஸ்நப் சட்(Snap Chat)-இன் பங்குகள் ஒரே நாளில் சுமார் 1 பில்லியன் டாலர்கள் சரிவை சந்தித்துள்ளது.

ஸ்நப் சட் செயலி(Snap Chat App)-இல் கடந்த வியாழக்கிழமையன்று விளம்பரம் ஒன்று வெளியானது. மொபைல் கேமின் விளம்பரமான அதில், ரிஹானாவை அறையப் போகிறீர்களா? அல்லது கிரிஸ்பிரவுனை குத்தப் போகிறீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இவ்விளம்பரம் ரிஹானாவின் கவனத்திற்குச் சென்றதை அடுத்து, அவர் மிகக் கோவமாக தனது எதிர்வினையை வெளிப்படுத்தினார்.

ஸ்நப் சட் (Snap Chat) விளம்பரம் தொடர்பான தனது கருத்தை அந்நிறுவனத்தின் தலைமையை கேள்வி கேட்கும் வகையில் இன்ஸ்டாகிராம் (Instagram)-இல் பதிவிட்ட ரிஹானா, “நீ எனது விருப்பமான செயலி(App)-களின் பட்டியலில் இல்லையென உனக்கே தெரியும் ஸ்நப் சட் (SnapChat). இந்த அசிங்கத்தின் மூலம் நீ என்ன சொல்ல வருகிறாய் என்பதை வெளிப்படுத்தவே இந்த பதிவை இட்டுள்ளேன். அறியாமையின் விளைவு இது என்றுக் கூறி கடந்துச் சென்றுவிடலாம், ஆனால் நீயொன்றும் அவ்வளவு முட்டாளில்லை. குடும்ப வன்முறைக்கு பலியானோரை இழிவு செய்து, கிண்டல் செய்யும் வகையிலான ஒன்றை திட்டமிட்டே பணம் செலவழித்து, உருவாக்கி பரப்பி விட்டுருக்கிறீர்கள். உன்னை நினைத்து அசிங்கப்படுகிறேன் ஸ்நப் சட்(SnapChat)” என வெள்ளிக்கிழமை பதிவிட்டிருந்தார்.

ரிஹானாவின் கடுமையான மொழியிலான பதிலடியானது, சர்வதேச ஊடகங்களில் பேசுபொருளானது. இதனை அடுத்து, Snap Chat-இன் பங்குகள் ஒரேநாளில் சுமார் 4% அளவு சரிந்தது. இது சுமார் 1 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில், சுமார் 6,500 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில ஆண்டுகள் முன்பாக ரிஹானாவும், பிரபல பாப் பாடகர் கிறிஸ் பிரவுனும் காதலித்து வந்தனர். அப்போது இருவரிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் கிறிஸ்பிரவுன், ரிஹானாவின் கன்னத்தில் அறைந்தார். இதையடுத்து இருவரும் பிரிந்தனர். இவ்விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதை நினைவுபடுத்தி கிண்டல் செய்யும் வகையிலான விளம்பரம் ஸ்நப் சட்(Snap Chat)-இல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்விவகாரம் தொடர்பாக ஸ்நப் சட்(SnapChat) நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது. இதுபோன்ற விளம்பரம் தங்கள் ஆப்பில் எப்படி இடம்பெற்றது என்பது குறித்து விசாரித்து வருவதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

சூப்பர் சான்ஸ்: பிளாக் ஃப்ரைடே விற்பனையில் PS5… மிஸ் பண்ணிடாதீங்க!

சூப்பர் சான்ஸ்: பிளாக் ஃப்ரைடே விற்பனையில் PS5… மிஸ் பண்ணிடாதீங்க!

டெல்லி : அமேசான் நிறுவனமானது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட (Black Friday Sale) பிளாக் ஃப்ரைடே விற்பனைக்கான தொடக்க தேதி முன்னதாக…

42 mins ago

தடையில்லா சான்று தந்தவர்களுக்கு நன்றி தெரிவித்த நயன்தாரா! தனுஷ் பெயர்?

சென்னை : நடிகை நயன்தாரா தன்னுடைய நீண்ட நாள் காதலரான விக்னேஷ் சிவனை கடந்த 2022-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அந்த…

47 mins ago

பங்குசந்தையில் தாக்கத்தை ஏற்படுத்துமா மகாராஷ்டிரா மாநில தேர்தல்? வல்லுனர்கள் கூறுவதென்ன?

மும்பை : இன்று மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி …

53 mins ago

மனைவியுடன் தேனிலவுக்கு சென்று வேறொரு அறையில் இருந்த ஏ.ஆர்.ரஹ்மான்! உண்மையை உடைத்த பிரபலம்!

சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்து செய்தி தான் பெரும் அதிர்ச்சி கலந்த பரபரப்பை ஏற்படுத்தி தற்போதைய ஹாட் ட்ரென்டிங்…

57 mins ago

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் ஏன் சிறப்பு வாய்ந்தது தெரியுமா?.

சென்னை :திருவண்ணாமலையின் சிறப்புகளும் திருக்கார்த்திகையின் சிறப்புகளையும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலய   சிறப்புகள் ; திருவண்ணாமலை…

1 hour ago

‘இனிமே இது தான்’…சிறுத்தையை தூக்கியெறிந்து லோகோவை மாற்றிய ஜாகுவார்!

டெல்லி : பல ஆண்டுகளாக, ஜாகுவார் நிறுவனம் பல்வேறு வகையான வாகனங்களை உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தி வருகிறது. வருகின்ற 2026…

2 hours ago