ரிஹானா கோபத்தால் கதறிய ஸ்நப் சட்(Snap Chat)!ஒரே நாளில் 1 பில்லியன் டாலர்களை இழந்தது ஸ்நப் சட்(Snap Chat)….
பிரபல பாடகி ரிஹானா ஸ்நப் சட் செயலி (Snap Chat App)-இல் வெளியான தன்னை குறித்த மோசமான விளம்பரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்ட நிலையில், ஸ்நப் சட்(Snap Chat)-இன் பங்குகள் ஒரே நாளில் சுமார் 1 பில்லியன் டாலர்கள் சரிவை சந்தித்துள்ளது.
ஸ்நப் சட் செயலி(Snap Chat App)-இல் கடந்த வியாழக்கிழமையன்று விளம்பரம் ஒன்று வெளியானது. மொபைல் கேமின் விளம்பரமான அதில், ரிஹானாவை அறையப் போகிறீர்களா? அல்லது கிரிஸ்பிரவுனை குத்தப் போகிறீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இவ்விளம்பரம் ரிஹானாவின் கவனத்திற்குச் சென்றதை அடுத்து, அவர் மிகக் கோவமாக தனது எதிர்வினையை வெளிப்படுத்தினார்.
ஸ்நப் சட் (Snap Chat) விளம்பரம் தொடர்பான தனது கருத்தை அந்நிறுவனத்தின் தலைமையை கேள்வி கேட்கும் வகையில் இன்ஸ்டாகிராம் (Instagram)-இல் பதிவிட்ட ரிஹானா, “நீ எனது விருப்பமான செயலி(App)-களின் பட்டியலில் இல்லையென உனக்கே தெரியும் ஸ்நப் சட் (SnapChat). இந்த அசிங்கத்தின் மூலம் நீ என்ன சொல்ல வருகிறாய் என்பதை வெளிப்படுத்தவே இந்த பதிவை இட்டுள்ளேன். அறியாமையின் விளைவு இது என்றுக் கூறி கடந்துச் சென்றுவிடலாம், ஆனால் நீயொன்றும் அவ்வளவு முட்டாளில்லை. குடும்ப வன்முறைக்கு பலியானோரை இழிவு செய்து, கிண்டல் செய்யும் வகையிலான ஒன்றை திட்டமிட்டே பணம் செலவழித்து, உருவாக்கி பரப்பி விட்டுருக்கிறீர்கள். உன்னை நினைத்து அசிங்கப்படுகிறேன் ஸ்நப் சட்(SnapChat)” என வெள்ளிக்கிழமை பதிவிட்டிருந்தார்.
ரிஹானாவின் கடுமையான மொழியிலான பதிலடியானது, சர்வதேச ஊடகங்களில் பேசுபொருளானது. இதனை அடுத்து, Snap Chat-இன் பங்குகள் ஒரேநாளில் சுமார் 4% அளவு சரிந்தது. இது சுமார் 1 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில், சுமார் 6,500 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில ஆண்டுகள் முன்பாக ரிஹானாவும், பிரபல பாப் பாடகர் கிறிஸ் பிரவுனும் காதலித்து வந்தனர். அப்போது இருவரிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் கிறிஸ்பிரவுன், ரிஹானாவின் கன்னத்தில் அறைந்தார். இதையடுத்து இருவரும் பிரிந்தனர். இவ்விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதை நினைவுபடுத்தி கிண்டல் செய்யும் வகையிலான விளம்பரம் ஸ்நப் சட்(Snap Chat)-இல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்விவகாரம் தொடர்பாக ஸ்நப் சட்(SnapChat) நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது. இதுபோன்ற விளம்பரம் தங்கள் ஆப்பில் எப்படி இடம்பெற்றது என்பது குறித்து விசாரித்து வருவதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.