இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கிய இயக்குனர் கோகுல் அடுத்ததாக ஆர்.ஜே.பாலாஜியை வைத்து சிங்கப்பூர் சலூன் என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த திரைப்படத்தில் மீனாட்சி சவுத்ரி, ஆன் ஷீத்தல், லோகேஷ் கனகராஜ், கிஷன் தாஸ், சத்யராஜ், ஷிவானி ராஜசேகர், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
இந்த திரைப்படத்தினை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது படத்திற்கு இசையமைப்பாளர் விவேக்-மெர்வின் இசையமைத்து இருக்கிறார். இந்த திரைப்படத்திற்கான ட்ரைலர் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று படத்தின் மீது இருக்கும் எதிர்பார்பை அதிகமாக்கியது.
விரைவில் தளபதி விஜய்யுடன் இணைந்து பணியாற்றுவேன் – ஆர்.ஜே.பாலாஜி
இந்நிலையில், மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. படத்தின் முதல் பாதியை பார்த்த பலரும் படம் அருமையாக இருப்பதாகவும் நகைச்சுவைக்கு பஞ்சமே இருக்காது எனவும் கூறி வருகிறார்கள்.
இதனையடுத்து, படத்தின் பிரீமியர் ஷோ பத்திரிக்கையாளர்கள் மற்றும் பிரபலங்களுக்கு போட்டுக்காட்டப்பட்டுள்ளது. அவர்களும் படத்தை பார்த்துவிட்டு தங்களுடைய விமர்சனங்களை கூறிஇருக்கிறார்கள்.
படத்தை பார்த்துவிட்டு ஒருவர் ” சிங்கப்பூர் சலூன் படம் அருமையாக இருக்கிறது. காமெடியில் கலக்கியிருக்கிறார் சத்யராஜ். ஒரு பாரில் நாலு பீர் அடித்து விட்டு சத்யராஜ் பண்ணுற அமர்களம் செம. அந்த காட்சிக்காகவே பல முறை படம் பார்க்கலாம்” என கூறியுள்ளார்.
மற்றோருவர் ” முதல் பாதி முழுக்க வேடிக்கையாகவும், இரண்டாம் பாதி உணர்வுகள் நிறைந்ததாகவும் இருக்கும். நேர்த்தியான எழுத்துடன் கூடிய மிக எளிமையான சதி. ஆர்.ஜே. பாலாஜி படம் முழுக்க அண்டர்ப்ளே செய்தும் நம் கவனத்தை ஈர்க்கிறார். அரவிந்த் சுவாமி கேமியோ மனதைத் தொடுகிறது. மொத்தத்தில், ஒரு ஒழுக்கமான குடும்ப பொழுதுபோக்கு.
மற்றோருவர் ” சிங்கப்பூர் சலூன் இடைவெளி காட்சி மிகவும் அருமையாக இருக்கிறது. நகைச்சுவை காட்சி சூப்பர் சத்யராஜ் சார் – அவருடைய ஒவ்வொரு செயலும் மீம் மெட்டிரியலாக மாறும்” என கூறியுள்ளார்.
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…
கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…