காதலர்கள் கொண்டாடி தீர்க்க வந்துவிட்டது ‘ஜோ’.! மனதை உருக்கும் திரை விமர்சனம் இதோ…

சின்னத்திரையில் இருந்து வளர்ந்து தற்போது வெள்ளி திரையில் கலக்கி கொண்டு இருக்கும் ரியோ தற்போது ‘ஜோ’ என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளர். இந்த திரைப்படத்தினை ஹரிஹரன் ராம் என்பவர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் தான் ஹரிஹரன் ராம்-க்கு முதல் திரைப்படம் இந்த படத்தின் மூலம் தான் இயக்குனராக அறிமுகமாகிறார்.
இந்த திரைப்படத்திற்கான ட்ரைலர் வெளியாகி படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்த நிலையில், படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில், படம் எந்த மாதிரி கதையை கொண்டுள்ளது படத்தின் ப்ளஸ் மற்றும் நெகட்டிவ் என்னவென்பதை பற்றியே முழு விமர்சனத்தை பற்றி பார்க்கலாம்.
கதை
ஜோ திரைப்படத்தின் கதை படி ஹீரோ ரியோ ஒரு கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கிறார். அவர் படிக்கும் அவருடைய வகுப்பில் ( மாளவிகா மனோஜ்) மலையாள பெண் படிப்பதற்காக சேர்கிறார். மற்ற படங்களில் நடப்பது போல இந்த படத்திலும் ரியோவுக்கு அந்த பெண்ணை பார்த்தவுடன் பட்டாம்பூச்சி மனதிற்குள் பறந்து காதல் வந்துவிடுகிறது. 90ஸ் காலகட்டத்தில் காதலை சொல்ல தயங்கியது போல மனதிற்குள் காதலை வைத்துக்கொண்டு ரியோ அந்த பெண்ணிடம் சொல்ல முடியாமல் தவித்துக்கொண்டு இருக்கிறார்.
அந்த காட்சிகளை பின்னணி இசையுடன் பார்க்கும்போது நமக்குள் கல்லூரி படிக்கும் போது நடந்த காதல் சம்பவங்களை நினைவுக்கு கொண்டு வருகிறது. காதலை சொல்ல தயங்கிய ரியோ ஒரு கட்டத்திற்கு மேல் தன்னுடைய காதலை அந்த பெண்ணிடம் சொல்லிவிடுகிறார். காதலை சொன்ன பின் அவருக்கும் ரியோவை பிடித்து போக நெருக்கமாக காதலித்து வருகிறார்கள். பின் கல்லூரி படிப்பு 4 வருடங்கள் முடியும் வரை இருவரும் காதலித்து வந்த நிலையில், கல்லூரி முடிந்த பின் இருவரும் பிரிகிறார்கள். இந்த காட்சிகளை வைத்து தான் படத்தின் முதல் பாதி நகர்கிறது.
பிறகு ரியோ விட்டார் ( மாளவிகா மனோஜ்) வீட்டிற்கு பெண் கேட்டு சென்றபோது அவர்களுடைய குடும்பத்திற்கும், இவர்களுடைய குடும்பத்திற்கும் மாறி மாறி வாக்குவாதம் மற்றும் கைகலப்பு நடைபெறுகிறது. பின் இதனால் மாளவிகா ரியோ மேல் தப்பு இருப்பதாகவும் தனது தந்தையை அவமான படுத்திவிட்டதாகவும் நினைத்து கோபம் கொள்கிறார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது. இதன் பிறகு ரியோவுக்கும், மாளவிகாவுக்கு தனி தனியாக தங்களுடைய வீட்டில் வேறொருவருடன் நிச்சியதார்தம் நடந்துவிடுகிறது.
பிறகு ரியோவுக்கு கல்யாணமும் ஆகிவிடுகிறது. படத்தில் ரியோவின் மனைவியாக பவ்யா என்பவர் நடித்து இருக்கிறார். எவ்வளவு சொல்லியும் ரியோ கல்யாணத்தை நிறுத்தவில்லை என வெறுப்புடனேயே அவர் மீது இருக்கிறார். படத்தில் ரியோவும், பவ்யாவும் கணவன், மனைவியாக நீடிப்பார்களா அல்லது பிரிவார்களா கடைசியில் என்ன ஆகப்போகிறது என்கிற அளவிற்கு ஒரு எதிர்பார்ப்பை மக்களுக்கு ஏற்படுத்தி படத்தின் இறுதிக்காட்சியில் சஸ்பென்ஸ் வைக்கப்பட்டுள்ளது.
விமர்சனம்
முழுக்க முழுக்க தமிழ் பட சாயலில் படம் எடுக்கப்படவில்லை பாதி மலையாள படம் போல காட்சிகள் எல்லாம் அமைந்திருப்பது பார்வையாளர்களுக்கு கண்டிப்பாகவே அது பிடிக்கும். அதனை தவிர்த்து படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் அனைவருமே அருமையாக நடித்திருக்கிறார்கள். படத்தின் பின்னணி இசையும் படத்தோடு பார்ப்பதற்கு அருமையாக இருக்கிறது. கண்டிப்பாக காதலர்கள் இந்த படத்தை ஒன்றாக சென்று பார்க்கலாம்.
பாசிட்டிவ்
படத்தின் பாசிட்டிவ் என்றால் படத்தின் பின்னணி இசை. மற்றோரு படத்தில் இடம்பெற்றப்பாடல்கள். அதைப்போல படத்தில் நடித்த நடிகர்களை சரியாக தேர்வு செய்ததும் ஒரு காரணம் என்றே கூறலாம்.
நெகட்டிவ்
நெகடிவ் என்றால் மற்ற படங்களை போலவே இந்த படத்திலும் காதல் தோல்வி அடைந்த பிறகு மதுகுடித்துவிட்டு தாடியை வளர்த்து அழைவது போலவே காட்டப்பட்டு இருக்கும். அந்த காட்சிகள் மற்றும் வழக்கமாக வரும் காதல் காட்சிகளை போல வசனங்கள் வரும் அதனை தவிர்த்து படத்தில் நெகட்டிவ் என்று சொல்ல கூடிய அளவிற்கு ஒன்றுமே இல்லை.