தெலங்கானா: புஷ்பா 2 சிறப்புக் காட்சி பார்க்க வந்தபோது நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, நடிகர் அல்லு அர்ஜுன் கைது, முதல்வர் ரேவந்த் ரெட்டியின் காட்டமான பேச்சு, இப்போது அல்லு அர்ஜுனின் வீடு தாக்குதல் என விவகாரம் நீண்டு கொண்டே செல்கிறது.
இந்த நிலையில், நடிகர் அல்லு அர்ஜுனின் வீட்டின் மீது, நடத்தப்பட்ட தாக்குதலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 6 பேருக்கு ஜாமீன் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
நேற்றைய தினம் நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் முன், ஐதராபாத் உஸ்மானியா பல்கலைகழக மாணவர்கள் நேற்று போராட்டம் நடத்தினர், போராட்டத்தின் போது அல்லு அர்ஜுன் வீட்டில் இருந்த பூந்தொட்டிகளை உடைத்தும், கற்களை எறிந்தும் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதனையடுத்து, வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பூந்தொட்டிகளை வீசி சேதப்படுத்திய நிலையில், நெற்றிவு இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால், இன்றைய தினம் அவர்களுக்கு ஜாமின் வழங்கி, மூன்று நாட்கள் அவகாசமும் கொடுத்து அவர்கள் ஒவ்வொருவரும் தலா ரூ.10 ஆயிரமும், இரண்டு பேர் உத்தரவாதமும் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, அல்லு அர்ஜுன் வீட்டில் தாக்குதலில் ஈடுபட்டு, கைதாகி ஜாமீன் பெற்றவர்களில் ஒரு சிலர் முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியது. இதனை சுட்டிக்காட்டி, இந்த விவகாரத்திற்கு பின்னணியில் ரேவந்த் ரெட்டி இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர்கள் உட்பட அல்லு அர்ஜுன் ரசிகர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
குறிப்பாக,பிஆர்எஸ் கட்சியின் முக்கியத் தலைவர் கிருஷாண்க் தனது எக்ஸ் பக்கத்தில், “ஜாமீனில் விடுதலையான ஸ்ரீநிவாஸ் ரேவந்த் ரெட்டியுடன் நெருங்கிய தொடர்புடையவர். அவர் 2019ல் நடந்த ZPTC தேர்தலில் தேர்தலில் போட்டியிட்டதாக” குறிப்பிட்டுள்ளார்.
இதனால், அல்லு அர்ஜுன் கைது, அவர் வீடு மீது நடத்தப்பட்ட தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்களுக்கு அரசியல் பழிவாங்கல் காரணமா என்று சலசலக்கப்படுகிறது. முன்னதாக, நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட, “ஒழுங்கு விஷயத்தில் மாநில டிஜிபி, நகர போலீஸ் கமிஷனர் கடுமையாக செயல்பட உத்தரவிடுகிறேன். இந்த விவகாரத்தில் மெத்தனப் போக்கை பொறுத்துக் கொள்ள முடியாது” என்றார்.
இதற்கிடையில், “புஷ்பா 2 பட கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்தது தொடர்பாக அல்லு அர்ஜுனிடம் தெரிவித்தபோதும், அவர் தியேட்டரை விட்டு வெளியேற மறுத்தார். படத்தை பார்த்து முடித்த பின்பு தியேட்டரை விட்டு வெளியேறுகிறேன் என்றே கூறினார்” என்று தியேட்டரில் நள்ளிரவு வரை அல்லு அர்ஜுன் இருந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு தெலங்கானா காவல்துறை குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…
டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…
சென்னை : மெட்ரோ நிர்வாகம் தற்போது, இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோஇரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை ரூ.3,657.53 கோடி…
கிறிஸ்மஸ் தாத்தா உருவான வரலாறு, கிறிஸ்மஸ் ட்ரீ வைக்க காரணம் மற்றும் வீட்டில் ஸ்டார் வைப்பது எதற்காக என்றும் இந்த…
ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) பிஎஸ்எல்வி சி-60 (PSLV-C60/SPADEX ) ராக்கெட் எப்போது எந்த தேதியில்…
டெல்லி : மாணவர்கள் கல்வி இடைநிற்றலை தடுக்கும் நோக்கில் மத்திய அரசு கல்வி உரிமை சட்டம் (RTE) 2019-ஐ அமல்படுத்தி…