Yuvan Shankar Raja: தன்னுடைய இன்ஸ்டா கணக்கு DEACTIVATE ஆன நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா எக்ஸ் தளத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் மெகா ஹிட் பாடல்களாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. யுவன் பாடல்களுக்கு எப்போதுமே தமிழ் மக்கள் மத்தியில் தனி மவுசு உண்டு. தற்போது தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் “The Greatest of All Time” படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.
சமீபத்தில், கோட் படத்தில் இருந்து யுவன் இசையில் ‘விசில் போடு‘ என்ற பாடல் வெளியாகி இருந்தது. இந்த பாடல் ஒரு சிலருக்கு பிடித்து இருந்தாலும் கூட ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை என்றே கூறலாம். இவ்வாறு, பாடல் கலவையான விமர்சனத்தை தான் பெற்று வருகிறது. கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், அந்த பாடல் யூடியூபிலும் மில்லியன் பார்வையாளர்களை சாதனை படைத்துள்ளது.
தளபதி விஜய்யின் அரசியல் வருகை குறித்து இந்தப் பாடலில் பல விஷயங்கள் பேசப்பட்டாலும், இசை ரீதியாக இந்தப் பாடலுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், பாடலை பிடிக்காத விஜய் ரசிகர்கள் பலரும் யுவன் சங்கர் ராஜாவை ட்ரோல் செய்தனர். இந்த சூழலில் தான் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டா கணக்கு முடங்கப்பட்டுள்ளது.
யுவனின் இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து, யுவன் தனது இன்ஸ்டா கணக்கை deactivate செய்துவிட்டாரா அல்லது வேறு யாரும் ஹக் செய்துவிட்டார்களா? சமூக வலைதளத்தில் பல்வேறு யூகங்களும் பரவத் தொடங்கியது.
இந்நிலையில், இன்ஸ்டா கணக்கு முடக்கப்பட்டது குறித்து X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இன்ஸ்டா கணக்கு முடக்கப்பட்டதாகவும், மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள்,…