மரியாதை ,அன்பு…சூர்யா – சச்சின் டெண்டுல்கர் திடீர் சந்திப்பு.! வைரலாகும் புகைப்படம்.!
நடிகர் சூர்யாவும் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சினும் சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் தனது 42-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு மும்பை பகுதியில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர் சூர்யா மும்பையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை நேரில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு மரியாதையை நிமர்த்தியாக நடைபெற்றதாக கூறப்படுகிறது.
View this post on Instagram
இந்த சந்திப்பின் போது சச்சின் சூர்யாவின் சிங்கம் படத்தை பற்றி பேசியுள்ளார். மேலும் இருவரும் சந்தித்துக்கொண்ட போது எடுத்த புகைப்படத்தை நடிகர் சூர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியீட்டு மரியாதை ,அன்பு என பதிவிட்டுள்ளார். அவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 42-வது படத்தில் நடித்து முடித்த பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.