“24 மணி நேரமும் திரைப்படங்கள் திரையிட அனுமதி.,” தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை.!

தமிழ் திரைப்படங்கள் இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் திரையிட வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Cinema Theater

சென்னை : தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் இன்று காலை 11 மணியளவில் டாக்டர் மல்லிகை தெருவில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, தயாரிப்பாளர்கள் மற்றும் தமிழக அரசுக்கும் தனித்தனி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர்கள் கவனத்திற்கு :

நாம் ஏற்கனவே பேசி ஒப்புக்கொண்டபடி திரைப்படங்களை OTT யில் கீழ்கண்ட முறையில் திரையிட அனுமதிக்க வேண்டும்.

  1. பெரிய நடிகர்களின் படம் 8 வாரம் கழித்தும், அதுக்கு அடுத்து வரிசையில் உள்ள நடிகர்களில் படம் 6 வாரங்கள் கழித்தும் OTT யில் திரையிடும்படி கேட்டுக்கொள்கிறோம்.
  2. தமிழ் திரைப்படங்கள் இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் தான் திரையிடப்பட வேண்டும்.
  3. சில மாநிலங்களில் முன்னதாக திரையிடப்படுவதால் தமிழகத்தில் வசூலில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது என காரணம் கூறியுள்ளார் திரையரங்கு உரிமையாளர்கள்.

அரசாங்க, கவனத்திற்கு

திரையரங்குகளில் பராமரிப்பு கட்டணத்தை அனுமதி கட்டணத்தில் இருந்து 10% வசூலிக்க அனுமதி தர வேண்டுகிறோம்.

  1. மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளுக்கு ரூ.250 வரையும், A/C திரையரங்குகளுக்கு .200 வரையும், NON A/C திரையரங்குகளுக்குரூ.150 வரையும் என்று கட்டணம் நிர்ணயித்து கொடுக்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
  2. நம் பக்கத்து மாநிலங்களில் உள்ளபடி 24 மணி நேரமும் திரைப்படங்கள் திரையிட அனுமதி உள்ளது. அதுபோல், தமிழ்நாட்டிலும் இது போன்ற அனுமதிகள் வழங்கப்பட வேண்டும். திரையரங்குகளில் இத்தனை காட்சி தான் திரையிட வேண்டும் என்று கட்டுப்பாடு இல்லாமல் திரையிட அனுமதி தர வேண்டும்.
  3. Operator License-க்கு தாங்கள் புதிய வழிமுறையை வகுத்து தந் தீர்கள். அது தெளிவாக இல்லாததால் அதை வைத்து எந்த பலனும் நாங்கள் அடையவில்லை. ஆகவே, அதை மாற்றி நாங்கள் கேட்டது போல் Operator License தேவையில்லை அல்லது எளிய முறையில் Operator Licens தரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
  4. MALL-களில் உள்ள நிரையரங்குகளில் Commercial Activity அனுமதி வழங்கியது போல் மற்ற திரையரங்குகளுக்கும் Commercial Activity அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
  5. மின் கட்டணத்தை MSME விதிகளை பின்பற்றி திரையரங்குகள் MSME இன் கீழ், வருவதால் MSME விதிபடி, எங்களுக்கு கட்டணங்கள் வசூலிக்கப்பட வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை நீங்கள் நிறைவேற்றி கொடுத்தால் திரையரங்குகள் நஷ்டமின்றி நடத்த முடியும். நாங்கள் மிகவும் சிரமமான சூழ்நிலையில் உள்ளதால் இந்த கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும்படி மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
TVK Vijay Dharmapuri
Pradeep John -TN Rains
Kasthuri Shankar - Police Arrest
Arvind Kejriwal - Kailash Gahlot
Space X - Elon Musk
tn rainy