நாளை மறுநாள் இந்தியா முழுவதும் 74-வது குடியரசு தின விழா நிகழ்ச்சி கொண்டாடப்பட உள்ளது. இதனையடுத்து சினிமாவில் நாட்டுப்பற்று இருந்த டாப் 5 படங்களை பற்றி பார்க்கலாம்.
1.சிறைச்சாலை
மோகன் லால், பிரபு ஆகியோர் நடிப்பில் கடந்த 1996-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “சிறைச்சாலை “. பிணை கைதியாக ஆங்கிலேயர்களிடம் மாட்டிக்கொண்டு எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை தெளிவாக காமித்திருப்பார் படத்தின் இயக்குனர் பிரியதர்ஷன்.
2.இந்தியன் 2
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இந்தியன் 2. ஒரு சுதந்திர போராட்ட தியாகி தற்போதைய இந்தியாவில் லஞ்சம் அதிகமாக இருப்பதை உணர்ந்து அதனை தடுக்க மேற்கொள்ளும் அதிரடி முயற்சிகளை இந்த திரைப்படத்தின் கதைக்களம். அந்த துடிப்புமிக்க சுதந்திர போராட்ட தியாகியாக சேனாதிபதி எனும் கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்திருப்பார். அவருடைய சுதந்திர போராட்ட காலகட்டத்தை இயக்குனர் சங்கர் மிக கச்சிதமாக எழுதியிருப்பார்.
3.மதராசபட்டினம்
ஏ.எல் விஜய் இயக்கத்தில் ஆர்யா, எமி.ஜாக்சன் நடிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “மதராசபட்டினம்”. இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கும்போது அந்த சமயத்தில் என்ன நடந்தது என்பதை மையமாக வைத்து இந்த மதராசபட்டினம் திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்தியர்களையும் தாண்டி நம்மளுடைய தமிழர்கள் எப்படி ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடினார்கள் என்பதை படத்தில் அருமையாக ஏ.எல் விஜய் காமித்து இருப்பார்.
4. பாரதி
இயக்குனர் ஞான ராஜசேகரன் இயக்கத்தில் நடிகர் சாயாஜி ஷிண்டே நடிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “பாரதி”. இந்த திரைப்படத்தில் பாரதியார் அவர்கள் எப்படி எல்லாம் வாழ்ந்தார் என்பதனை அருமையாக காட்டி இருப்பார்கள். பாரதியார் தீண்டாமை பற்றி பேசியிருப்பார், அதைப்போல பாரதியார் சுதந்திர போராட்டத்திற்கு மேற்கொண்ட வழிகள், ஆங்கிலேயரை எப்படி எல்லாம் எதிர்த்தார் என்பதை படத்தில் தெளிவாக காட்டியிருப்பார்கள்.
5.காந்தி
இயக்குனர் ரிச்சர்ட் அட்டன்பரோ இயக்கத்தில் 1982 -ஆம் ஆண்டு ஆங்கில மொழி வெளிவந்த படம் “காந்தி”. காந்தியின் வரலாற்றினை மையமாகக் கொண்டு வெளிவந்த இந்த திரைப்படம் 1982 -ஆம் ஆண்டில் 8 ஆஸ்கார் விருதுகளைப் பெற்றது. காந்தி சுதந்திர போராட்டத்திற்கு ஈடுபடுவதற்கு முன்னர் அவர் வாழ்வில் நடந்த சம்பவங்கள் எவ்வாறு அவர் இந்திய விடுதலை போராட்டாத்திற்கு வந்தார். அதன்பிறகு, எவ்வாறு போராட்டத்தை ஆரம்பித்தார் என்பதை சுருக்கமாக முக்கிய நிகழ்வுகளை உள்ளடக்கி இந்த திரைப்படம் உருவாகி இருக்கும்.
சென்னை : தைப்பொங்கல் நாளின் மறுநாள் மாட்டுப்பொங்கல் பண்டிகை தமிழர்களால் கொண்டாட்டப்பட்டு வருகிறது. இந்த நாளில் உழவர்களின் நண்பனாக திகழும்…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. நேற்று மதுரை மாவட்டம் அவனியாபுரம்…
தெலுங்கானா : மாநிலம் ஹைதராபாத் - வாரங்கல் நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை அதிகாலை நடந்த ஒரு துயரமான சாலை விபத்து சம்பவத்தில் 2…
பீதர்: கர்நாடகா மாநிலம் பீதர் மாவட்டத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தில் நிரப்பப் பணம் எடுத்துச் சென்றவர்கள் மீது பட்டப்பகலில் மர்ம நபர்கள்…
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 'வணங்கான்' திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.…
டெல்லி : அடுத்த மாதம் சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் 8…