கணவர் இயக்கத்தில் நயன்தாரா? அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிக்க அதிரடி முடிவு!

nayanthara vignesh shivan

இயக்குனர் விக்னேஷ் சிவன் கடைசியாக காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் அடுத்ததாக விக்னேஷ் சிவன் பிரதீப் ரங்கநாதனை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

இந்த திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இருந்தாலும், விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் ரங்கநாதன் இருவருமே ஒன்றாக இணைந்து கொண்டு தான் இப்போது வெளியே எங்கயாவது செல்வது என இருந்துகொண்டு இருக்கிறார்கள். படத்தின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்கப்படவுள்ளது.

பிக் பாஸ் வீட்டை விட்டு வந்ததும் ஜோவிகாவுக்கு அடித்த ஜாக்பாட்?.

இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது அப்போது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.  இதற்கிடையில், படத்தில் எந்த பிரபலங்கள் எல்லாம் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்கள் என்பதற்கான சில தகவல்களும் வைரலாகி கொண்டு இருக்கிறது.

அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட இந்த திரைப்படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா மற்றும் இயக்குனர் மிஷ்கின் இருவரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அந்த தகவலை தொடர்ந்து தற்போது இந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாராவும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அது என்ன கதாபாத்திரம் என்றால் பிரதீப் ரங்கநாதனுக்கு  அக்காவாக நடிக்கும் ஒரு கதாபாத்திரம் தான். ஏற்கனவே, லவ் டுடே எனும் மெகா ஹிட் படத்தை கொடுத்துள்ள பிரதீப் ரங்கநாதனுடைய மார்க்கெட் இப்போது உச்சத்தில் இருக்கிறது. இவர் இப்போது ஹீரோவாக ஒரு படத்தில் நடித்து அந்த படம் வெளியானால் அந்த படம் பல கோடிகள் வசூல் செய்துவிடும். இந்த சூழலில் அவருடன் நயன்தாராவும் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் கண்டிப்பாக அந்த படத்தின் வசூல் பல கோடிகளை தாண்டும் என கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே, நயன்தாரா இமைக்கா நொடிகள் படத்தில் ஆதர்வாவுக்கு அக்காவாக நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்