மொத்தம் 4 மணி நேரம் ரெக்கார்டிங்! யுவனால் நொந்துபோன தளபதி விஜய்?
Vijay நடிகர் விஜய் நடிப்பை தாண்டி பாடல்களையும் பாடுவதில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒருவர். சினிமா துறையில் நடிக்க ஆரம்ப காலகட்டத்தில் இருந்து தன் படங்கள் மட்டுமின்றி பிற படங்களில் பாடல்களையும் பாடி இருக்கிறார். அதன் பிறகு முன்னணி நடிகராக வளர்ந்த பின் தன்னுடைய படங்களில் முதல் பாடல் அல்லது ஏதாவது ஒரு பாடல் ஆவது பாடி வருகிறார்.
READ MORE – ஒரு வழியா குறைச்சிட்டாங்க போல! பழைய லுக்கில் அனுஷ்கா! குவிய போகும் பட வாய்ப்புகள்?
அந்த வகையில் கடைசியாக லியோ திரைப்படத்தில் கூட அனிருத் இசையில் நான் ரெடி தான் என்கிற பாடலை பாடி இருந்தார். அதனை தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தி கோட் பாடத்திலும் யுவன் சங்கர் ராஜா இசையில் ஒரு பாடலை அவர் பாடியிருப்பதாக முன்னதாகவே தகவல்கள் வெளியாகி இருந்தது அந்த தகவல் உண்மைதானாம்.
சமீபத்தில் பெங்களூரில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் யுவன் சங்கர் ராஜா இதனை உறுதிப்படுத்தியும் இருந்தார். எனவே அந்த பாடல் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் ஒரு பக்கம் காத்திருக்கிறார்கள் . இந்த நிலையில் அந்த பாடல் குறித்த ஒரு தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால் அந்த அந்தப் பாடலை ரெக்கார்டிங் செய்ய மட்டும் விஜய் 4 மணி நேரம் எடுத்துக்கொண்டாராம்.
READ MORE – இப்போ டைம் இல்ல! தனுஷுக்கு அல்வா கொடுத்த மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குனர்!
அந்த அளவிற்கு யுவன் சங்கர் ராஜா அந்த பாடலை சொல்லிக் கொடுத்து கிட்டத்தட்ட நாலு மணி நேரம் இந்த பாடலை விஜய் பாடிக்கொண்டே இருந்தாராம். அந்த பாடலும் மிகவும் அருமையாக வந்திருக்கிறதாம். இதுவரை ரசிகர்கள் பலருமே யுவன் சங்கர் ராஜா மற்றும் விஜய் கூட்டணியில் படம் வரவேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்த்த காத்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களுக்கு அந்த பாடல் விருந்தாக அமையும் எனவும் நம்ப தக்க சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
READ MORE – 2 லட்சத்தை அசால்ட்டாக தொலைத்த தயாரிப்பாளர்! விஜயகாந்த் செய்த செயல்? ப்பா என்ன மனுஷன்யா!
இதுவரை விஜய் தன்னுடைய படங்களில் பாடிய பாடல்களுக்கு எல்லாம் இவ்வளவு நேரம் எடுத்ததாக தகவல்கள் வெளியானதே இல்லை. முதல் முறையாக ஒரு பாடலை பாட அவர் நாலு மணி நேரம் எடுத்துக்கொண்ட தகவல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் அந்த பாடல் எப்போது வெளியாகும் என்பதற்கான அறிவிப்பும் அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.