இனிமேல் நடிக்க மாட்டேன்! ரஜினிக்கு வில்லனாக நடிக்க மறுத்த விஜய் சேதுபதி?

நடிகர் ரஜினிகாந்த் தற்போது தனது 170 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இந்த திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு அவர் அடுத்ததாக தன்னுடைய 171வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். அந்த திரைப்படத்தினை பிரபல இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டு (2024) மார்ச் மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது. இதற்கிடையில், திரைப்படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் குறித்த தகவலும் இணையத்தில் வைரலாவது உண்டு. அந்த வகையில் தலைவர் 171 படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க வைக்க பிரபல நடிகரான விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாம்.
ஆனால், விஜய் சேதுபதி சமீப காலமாக வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதை நிறுத்திவிட்ட காரணத்தினால் அவர் தலைவர் 171 திரைப்படத்தில் வில்லனாக நடிக்க மறுத்துவிட்டாராம். ஏற்கனவே அவர் ரஜினிக்கு வில்லனாக பேட்ட திரைப்படத்திலும், லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
எனவே, அவர் ரஜினிக்கு வில்லனாக இந்த திரைப்படத்தில் நடித்தால் சரியாக இருக்கும் என்று லோகேஷ் திட்டமிட்டு இருந்தாராம். ஆனால், இனிமேல் வில்லனாக நடிக்கவே கூடாது படத்தில் ஹீரோவாக நடிக்கவேண்டும் என்று விஜய் சேதுபதி ஒரு முடிவில் இருக்கும் காரணத்தால் தலைவர் 171 படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம்.
ரஜினிக்கு வில்லனாக அவர் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மேலும் விஜய் சேதுபதி தற்போது விடுதலை 2, மஹாராஜா உள்ளிட்ட படங்களில் எல்லாம் ஹீரோவாக நடித்து வருகிறார். கடைசியாக வில்லனாக ஜவான் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்த சீசன் 6 தோல்வி…மன வேதனையில் குமுறிய பாட் கம்மின்ஸ்!
April 24, 2025
பஹல்காம் தாக்குதல் சம்பவம்…பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவுகள்?
April 24, 2025
SRH vs MI : ஹைதராபாத்தை சம்பவம் செய்த மும்பை இந்தியன்ஸ்! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!
April 23, 2025