தயாரிப்பாளர் தலையில் குண்டை போட்ட ஜப்பான்! இத்தனை கோடி நஷ்டமா?

கார்த்தி நடிப்பில் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ஜப்பான் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை. படம் வெளியான 5 நாட்களில் கூட உலகம் முழுவதும் 13 கோடி வரை வசூல் செய்திருந்தகாக முன்னதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
படம் வெளியாக்க 6-வது நாளாக சில திரையரங்குகளில் மட்டுமே வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. மேலும், இந்த திரைப்படத்தால் தயாரிப்பாளருக்கு 30 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பொதுவாகவே ஒரு படங்கள் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே அந்த படத்தின் தயாரிப்பாளர் படத்தை திரையரங்குகளுக்கு பிந்தைய வெளியீட்டிற்காக சாட்டிலைட் உரிமையை நல்ல விலைக்கு விற்று விடுவார்கள்.
ஆனால் இந்த ஜப்பான் திரைப்படத்தை வெளியாவதற்கு முன்பு படத்தின் தயாரிப்பாளர் எந்த தொலைக்காட்சிக்கும் விற்கவில்லையாம். ஏனென்றால் ஜப்பான் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடையும் அதனை வைத்து பெரிய நிறுவனத்திடம் விற்று விடலாம் என யோசனை வைத்திருந்தாராம் .ஆனால் ஜப்பான் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை.
மலையாள சினிமாவில் மிரட்ட போகும் எஸ்.ஜே.சூர்யா! யாருக்கு வில்லனாகிறார் தெரியுமா?
இதன் காரணத்தினால் படத்தின் சாட்டிலைட் உரிமையை கூட வாங்க எந்த தொலைக்காட்சியும் முன்வரவில்லையாம்.கண்டிப்பாக இந்த திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமத்தை மட்டும் 15 கோடிக்கு விற்பனை செய்யலாம் என தயாரிப்பாளர் திட்டமிட்டு இருந்தாராம். ஆனால், எந்த தொலைக்காட்சியும் வாங்க முன் வரவில்லை என்ற காரணத்தால் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் படத்தின் தயாரிப்பாளர் இருக்கிறாராம்.
படத்தின் சாட்டிலைட் இன்னும் விற்பனை ஆகாத காரணத்தால் தயாரிப்பாளருக்கு 15 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம். இதனால் என்னதான் செய்ய செய்யலாம் என குழப்பத்தில் படத்தின் தயாரிப்பாளர் இருக்கிறாராம். மேலும் இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கார்த்தி நடித்த சர்தார் படம் வெளியாக்க மிகப்பெரிய ஹிட் ஆன நிலையில், இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அவருடைய நடிப்பில் வெளியான ஜப்பான் அவருக்கு தோல்வி படமாக அமைந்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025
வீட்டுக்கு 200 ரூபாயில் ‘ஹை ஸ்பீடு’ இன்டர்நெட்! அமைச்சர் பி.டி.ஆர் அசத்தல் அறிவிப்பு!
April 25, 2025
“காஷ்மீர் எனக்கு 2 சகோதரர்களை கொடுத்துள்ளது” தாக்குதலில் தந்தையை இழந்த பெண் உருக்கம்.!
April 25, 2025