Categories: சினிமா

விஜய் தொடங்கும் அரசியல் கட்சி பெயர் இதுவா?

Published by
பால முருகன்

நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் பல்வேறு நல்ல விஷயங்களை செய்து வரும் நிலையில், அவர் அரசியலுக்கு வருவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது என கூறப்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் கூட 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கி இருந்தார்.

அதன்பிறகு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு நிவாரண உதவியும் வழங்கி இருந்தார். இதுமட்டுமின்றி அடிக்கடி விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து வருவதால் அவர் அரசியலுக்கு வரவுள்ளார் என்றும் பேசப்பட்டு வருகிறது.

மதுரை எய்ம்ஸ் – சுற்றுச்சுழல் அனுமதி கோரி விண்ணப்பம்!

அந்த வகையில், நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், கடந்த ஜனவரி 25 -ஆம் தேதி  பனையூரில் விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் விஜய் திடீர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில், விஜய் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக மாற்ற  இருப்பதாக தகவல்கள் ஏற்கனவே வெளியாகி இருந்தது.

இந்த நிலையில், அதனை தொடர்ந்து தற்போது கிடைத்திருக்க கூடிய தகவல் என்னவென்றால், விஜய் தொடங்கவுள்ள அந்த அரசியல் கட்சிக்கு ‘தமிழக முன்னேற்ற கழகம்’ என்று பெயர் வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரும் பிப்ரவரி மாதம் வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

மேலும், விஜய் மக்கள் இயக்கம் கொடியில் விஜயின் புகைப்படம் இடம்பெற்று இருக்கும் ஆனால், தற்போது ‘தமிழக முன்னேற்ற கழகம்’ கட்சியில் விஜயின் புகைப்படம் இடம்பெறாது எனவும் அவருடைய புகைப்படத்திற்கு பதில் கட்சியின் சின்னத்துடைய புகைப்படம் இடம்பெறவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Recent Posts

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை! இன்றைய நிலவரம் என்ன?

சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…

4 mins ago

இலங்கையில் சாதனை படைத்த NPP.! தனி பெரும்பான்மை நிரூபித்த புதிய அதிபர்.!

கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…

10 mins ago

Live : இலங்கை அதிபர் தேர்தல் முதல்., செந்தில் பாலாஜி மீதான ஊழல் புகார் வரையில்…

சென்னை : நடைபெற்ற இலங்கை  புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர்  அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…

29 mins ago

ரூ.397 கோடி ஊழல்? செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் பரபரப்பு புகார்!

சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…

1 hour ago

நியூஸிலாந்து பார்லிமென்ட்டில் நடனம் ஆடி எதிர்ப்பைத் தெரிவித்த பெண் எம்.பி! வைரலாகும் வீடியோ!

வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…

2 hours ago

மெட்டா நிறுவனத்துக்கு ரூ.7ஆயிரம் கோடி அபராதம்! ஐரோப்பிய ஆணையம் அதிரடி!

வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…

3 hours ago