விஜய் தொடங்கும் அரசியல் கட்சி பெயர் இதுவா?
நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் பல்வேறு நல்ல விஷயங்களை செய்து வரும் நிலையில், அவர் அரசியலுக்கு வருவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது என கூறப்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் கூட 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கி இருந்தார்.
அதன்பிறகு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு நிவாரண உதவியும் வழங்கி இருந்தார். இதுமட்டுமின்றி அடிக்கடி விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து வருவதால் அவர் அரசியலுக்கு வரவுள்ளார் என்றும் பேசப்பட்டு வருகிறது.
மதுரை எய்ம்ஸ் – சுற்றுச்சுழல் அனுமதி கோரி விண்ணப்பம்!
அந்த வகையில், நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், கடந்த ஜனவரி 25 -ஆம் தேதி பனையூரில் விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் விஜய் திடீர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில், விஜய் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக மாற்ற இருப்பதாக தகவல்கள் ஏற்கனவே வெளியாகி இருந்தது.
இந்த நிலையில், அதனை தொடர்ந்து தற்போது கிடைத்திருக்க கூடிய தகவல் என்னவென்றால், விஜய் தொடங்கவுள்ள அந்த அரசியல் கட்சிக்கு ‘தமிழக முன்னேற்ற கழகம்’ என்று பெயர் வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரும் பிப்ரவரி மாதம் வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
மேலும், விஜய் மக்கள் இயக்கம் கொடியில் விஜயின் புகைப்படம் இடம்பெற்று இருக்கும் ஆனால், தற்போது ‘தமிழக முன்னேற்ற கழகம்’ கட்சியில் விஜயின் புகைப்படம் இடம்பெறாது எனவும் அவருடைய புகைப்படத்திற்கு பதில் கட்சியின் சின்னத்துடைய புகைப்படம் இடம்பெறவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.