வெற்றிமாறன் இல்லை! ‘தளபதி 69’ இயக்குனர் இவரா? வெளியான லேட்டஸ்ட் தகவல்!

நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமான தளபதி 69 திரைப்படத்தை எந்த இயக்குனர் இயக்க போகிறார் என்ற கேள்வி தான் ரசிகர்களின் மனதில் தற்போது விடைகிடைக்காத ஒன்றாக இருந்து வருகிறது. விஜய் அந்த படத்தில் நடித்து முடித்த பிறகு சினிமாவை விட்டு விலகி தனது அரசியல் பயணத்தை தொடங்கவுள்ளார். இதனை விஜய்யே அறிக்கை வெளியீட்டு அறிவித்து இருந்தார்.
அதனை தொடர்ந்து விஜயின் 69-வது படத்தின் இயக்குனர் பற்றிய தகவல் பரவி கொண்டு இருக்கிறது. கடைசியாக வெற்றிமாறன் தான் விஜயின் 69-வது படத்தை இயக்குவார் என்றும் தகவல்கள் பரவியது. அதற்கு முன்னதாக எச்,வினோத், கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் பரவியது. ஆனால், இன்னும் இதனை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை.
குழந்தை வரத்தை அள்ளித் தரும் கர்ப்பரட்சாம்பிகை கோவில்..! மருத்துவத்தையும் மிரள செய்யும் அதிசயம்..!
இந்த நிலையில், தற்போது தளபதி 69 படத்தின் இயக்குனர் பற்றிய தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதன்படி, தளபதி 69 படத்தை பிரபல தெலுங்கு இயக்குனரான த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் கடைசியாக குண்டூர் காரம் எனும் திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது.
தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ்-ம் ஒருவர் தான். அங்கு அவர் அந்த அளவிற்கு பிரபலமான ஒரு இயக்குனர். எனவே இவருடைய இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கலாம் என விஜய் திட்டமிட்டு இருக்கிறாராம். இதுவும் தகவலா அல்லது உண்மையா என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பிறகே தெரிய வரும். மேலும் நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
அமித்ஷா பேச்க்கு வலுக்கும் எதிர்ப்புகள்! ரயிலை மறித்த விசிக, போராட்டம் அறிவித்த திமுக…
December 19, 2024
தொடர்ந்து சரியும் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?
December 19, 2024
பயப்படவேண்டாம் மிதமான மழைக்கு தான் வாய்ப்பு! வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
December 19, 2024
ஆப்பிரிக்காவை உலுக்கிய சிடோ புயல்! 45 பேர் பலி!
December 19, 2024