இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய 21-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு தற்காலிமாக SK21 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தினை கமல்ஹாசன் தனது ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.
இந்த திரைப்படத்தில் இதுவரை எடுத்து நடிக்காத ஒரு கதாபாத்திரத்தை நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய்பல்லவி நடித்து வருகிறார். படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மட்டுமே வெளியாகி இருக்கும் நிலையில், இன்னும் படத்தின் தலைப்பு குறித்த விவரங்கள் அறிவிக்கப்படவில்லை.
விஜய்யை சந்தித்து கதை கூறிய எச்.வினோத்?
இதனையடுத்து, படத்தின் தலைப்பு எப்போது வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள். வரும் 17-ஆம் தேதி சிவகார்த்திகேயன் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு வெளியிட வாய்ப்புள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்நிலையில், இந்த திரைப்படத்திற்கு வைக்கப்படவுள்ள தலைப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி, சிவகார்த்திகேயனின் 21-வது படத்திற்கு போர் களத்தில் சிங்கம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாம். இதனை தவிர இன்னும் இரண்டு தலைப்புகளை முடிவு செய்து படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசனுக்கு படக்குழுவினர் அனுப்பி இருக்கிறார்களாம். இதில் கமல்ஹாசன் எந்த தலைப்பை ஓகே செய்கிறாரோ அது தான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் தலைப்பாக வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…