நடிகர் சிவகார்த்திகேயன் சிறிய வயதில் இருந்தே ரஜினிகாந்தின் தீவிர ரசிகர். இதனை அவர் பல பேட்டிகளிலேயே தெரிவித்தும் இருக்கிறார். அதுமட்டுமின்றி, சிவகார்த்திகேயன் தொகுப்பாளராக இருந்த சமயத்தில் சிவகார்த்திகேயன் பல மேடைகளிலும் ரஜினியின் குரலை தான் மேமிக்ரி செய்திருக்கிறார்.
அப்படி இருந்த சிவகார்த்திகேயன் இப்போது முன்னணி நடிகராக வளர்ந்துள்ள நிலையில், அவர் ஒரு படத்திலாவது ரஜினியுடன் இணைந்து படம் நடிப்பாரா என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அதற்கான ஒரு வாய்ப்பும் அவருக்கு ஜெயிலர் படத்தில் வந்ததாம். ஜெயிலர் படத்தை இயக்குனர் நெல்சன் தான் இயக்கி இருந்தார்.
எற்கனவே, சிவகார்த்திகேயன் நெல்சனின் நெருங்கிய நண்பர் எனவே ஜெயிலர் படத்தில் அவரை ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க முடிவு செய்தாராம். ஆனால், சில காரணங்களால் ஜெயிலர் படத்தில் சிவகார்திகேயனால் நடிக்க முடியாமல் போய்விட்டது. இந்த நிலையில், சிவகார்த்திகேயனுக்கு மீண்டும் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு வந்து இருக்கிறதாம்.
அதன்படி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள “தலைவர் 171” படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க நடிகர் சிவகார்த்திகேயனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். ஏற்கனவே அவரால் ஜெயிலர் படத்தில் நடிக்க முடியாமல் போன நிலையில் இந்த முறை அவர் தலைவர் 171 படத்தில் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியும் ஆகிவிட்டதாம்.
வழக்கமாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் படங்களில் எல்லாம் பல முன்னணி நடிகர்கள் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்தும் வருகிறார்கள். எனவே, சிவகார்த்திகேயனும் தலைவர் 171 படத்தில் நடிக்கவுள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. மேலும், ரஜினிகாந்த் தற்போது தன்னுடைய 170-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு 171-வது படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…