வெறித்தனம்.! G.O.A.T படத்தில் நம்ம கேப்டன் காட்சி! பார்த்துவிட்டு பிரேமலதா கூறிய வார்த்தை?
சென்னை : கோட் படத்தில் விஜயகாந்தை AI மூலம் உருவாக்கிய காட்சியை பார்த்துவிட்டு பிரேமலதா நன்றாக இருப்பதாக கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மறந்த கேப்டன் விஜயகாந்த் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் படத்தில் AI-மூலம் உருவாக்கம் செய்யப்பட்டு கேமியோ கதாபாத்திரத்தில் வருவதாக தகவல்கள் ஏற்கனவே வெளியாகி இருந்தது. இதனை கேப்டன் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா கடந்த சில நாட்களுக்கு முன்பு பேட்டி ஒன்றில் கலந்துகொண்டபோது உறுதிப்படுத்தி இருந்தார்.
வெங்கட் பிரபு சிறிய வயதில் இருந்தே தனக்கு தெரியும் அதைப்போல விஜய்யும் எங்களுக்கு ரொம்பவே நெருக்கமானவர் எனவே இவர்கள் கேட்டால் கண்டிப்பாக என்னால் மறுப்பு தெரிவிக்க முடியாது எனவே, நான் ஒப்புக்கொண்டேன் என்று கூறியிருந்தார். எனவே, விஜயகாந்த் AI மூலம் கோட் படத்தில் வருவார் என்ற தகவலை கேட்டவுடன் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.
இந்த நிலையில், கோட் படத்தில் விஜயகாந்த் வரும் அந்த காட்சியை கச்சிதமாக படக்குழு AI தொழில்நுட்பம் மூலம் தயார் செய்துவிட்டதாம். தயார் செய்த பிறகு பிரேமலதா விஜயகாந்திற்கு கால் செய்து காட்சி ரெடி ஆகிவிட்டது என்று கூறி அந்த காட்சியை போட்டு காமித்தாராம். அந்த காட்சியை பார்த்துவிட்டு ஆச்சரியம் அடைந்துவிட்டாராம்.
ஏனென்றால், அந்த காட்சியை பார்க்கும்போது அப்படியே விஜயகாந்தே வந்து நடித்து கொடுத்த அளவிற்கு இருக்கிறதாம். அந்த காட்சியை பார்த்துவிட்டு ரொம்பவே அருமையாக இருப்பதாகவும் வெங்கட் பிரபுவிடம் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். படத்தில் விஜயகாந்த் முக்கியமான ஒரு காட்சியில் தான் விஜயகாந்த் வருகிறாராம். அந்த காட்சி பார்க்கும்போது எழுந்து நின்று கைதட்டும் அளவிற்கு இருக்கும் எனவும், படத்தில் அவருடைய காட்சி 2.5 நிமிடம் இடம்பெறும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலை பிரபல யூடியூப் சேனலான வலைப்பேச்சு தெரிவித்துள்ளது.