பிரபல இசையமைப்பாளரான இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தில் இளையராஜா கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளார் என்றும் இந்த திரைப்படத்தினை பிரபல பாலிவுட் இயக்குனரான பல்கி இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.
அதனைத் தொடர்ந்து சில காரணங்களால் படத்தில் இருந்து பால்கி தூக்கப்பட்டு அவருக்கு பதிலாக இரண்டு தமிழ் இயக்குனர்களான அருள் மாதேஸ்வரன் மற்றும் மாரி செல்வராஜ் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது . அது மட்டுமின்றி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை தனுஷை தயாரித்து நடிப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது தன்னுடைய பயோபிக் படத்தை எடுக்க இயக்குனரை தேர்வு செய்துவிட்டாராம் இளையராஜா. அதன்படி அருண் மாதேஸ்வரன் தான் கிட்டத்தட்ட இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை இயக்க உள்ளாராம்.எனவே தன்னுடைய படத்தை இயக்க வேண்டும் என்றால் தன்னிடம் சில நாட்கள் இருந்து தன்னைப் பற்றிய வரலாற்று கதையை மெல்ல மெல்ல கூறுவது தான் சரியாக இருக்கும் என்று இளையராஜா அருண் மாதேஸ்வரனை நேரில் அழைத்து பக்கத்தில் வைத்திருக்கிறாராம்.
விரைவில் இளையராஜா கதைகளை முழுவதும் சொல்லி முடித்த பிறகு ஒரு படத்தை இயக்குவதற்கான கதையை ரெடி செய்து இளையராஜா மற்றும் தனுஷிடம் அருண் மாதேஸ்வரண் கூறுவார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தகவலை வலைப்பேச்சு தெரிவித்துள்ளது. விரைவில் இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரும் எனவும் கூறப்டுகிறது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…