ஆர்யாவை கழட்டிவிட்ட லிங்கு சாமி! பையா 2 படத்தில் இளம் ஹீரோவை களமிறக்கி தரமான சம்பவம்!

லிங்கு சாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற பையா திரைப்படத்தின் இரண்டாவது பாகம் உருவாகவிருப்பதாக தகவல்கள் கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் பரவி வருகிறது. ஆனால், இந்த இரண்டாவது பாகத்தில் கார்த்தி நடிக்கவில்லை என்ற தகவலும் முன்னதாகவே வெளியாகிவிட்டது.
கார்த்தி நடிக்க மறுத்த நிலையில், பையா 2-வது பாகத்தில் நடிகர் ஆர்யா நடிக்கவுள்ளதாகவும் அவருக்கு ஜோடியாக நடிகை ஜான்வி கபூர் நடிக்க உள்ளதாகவும் முன்னதாகவே தகவல்கள் பரவி வந்தது. ஆனால் அந்த திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவுமே வெளியாகவில்லை. அதன் பிறகு ஆர்யா இந்த திரைப்படத்திலிருந்து விலகிவிட்டதாகவும் படத்தின் கதையை இயக்குனர் லிங்குசாமி நடிகர் கவினிடம் கூறியதாகவும் ஒரு தகவல் பரவியது.
கோடி கணக்கில் செலவு செய்து எடுக்கப்பட்ட பையா கிளைமாக்ஸ்! கடைசி நேரத்தில் மாற்றியது ஏன் தெரியுமா?
இந்த நிலையில் அதனைத் தொடர்ந்து ஆர்யாவை கழட்டிவிடும் வகையில், லிங்குசாமி அதிரடியான முடிவு ஒன்றை எடுத்து படத்தின் கதையை இளம் நடிகரிடம் கூறியுள்ளாராம். அந்த இளம் நடிகர் வேறு யாரும் இல்லை அதர்வாவின் தம்பி ஆகாஷ் தான். அவரிடம் லிங்கு சாமி பையா 2 படத்தின் கதையை கூறியுள்ளார். அவருக்கும் இந்த படத்தின் கதை மிகவும் பிடித்து போக படம் பண்ணலாம் என்று கூறியிருக்கிறாராம்.
தற்போது ஆகாஷ் இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகியிருந்த திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வரும் நிலையில், அந்த படத்தில் நடித்து முடித்த பிறகு அவர் அடுத்ததாக பையா 2 படத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் பையா 2 படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், பையா படத்தின் முதல் பாகத்தில் கார்த்திக்கு ஜோடியாக தமன்னா மிலிந்த் சோமன், சோனியா தீப்தி, ஜெகன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்த சீசன் 6 தோல்வி…மன வேதனையில் குமுறிய பாட் கம்மின்ஸ்!
April 24, 2025
பஹல்காம் தாக்குதல் சம்பவம்…பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவுகள்?
April 24, 2025
SRH vs MI : ஹைதராபாத்தை சம்பவம் செய்த மும்பை இந்தியன்ஸ்! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!
April 23, 2025