சிம்பு படமா? அப்போ 13 கோடி கொடுங்க…தயாரிப்பாளரிடம் கண்டிஷன் போட்ட சந்தானம்!
நடிகர் சந்தானம் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் காமெடியன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை : நடிகர் சந்தானம் தொடர்ச்சியாகவே ஹீரோவாகவே படங்களில் நடித்து வரும் நிலையில் மீண்டும் காமெடியனாக அவரை பார்க்க மாட்டோமா என ரசிகர்கள் ஏங்கி கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்காகவே ஒரு குட் நியூஸ் கிடைத்துள்ளது. அது என்னவென்றால், சந்தானம் நடிகர் சிம்புவுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். அதுவும் காமெடியான கதாபாத்திரத்தில் நடிக்க தான் சந்தானம் கமிட் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது.
நடிகர் சிம்பு அடுத்ததாக தன்னுடைய 49-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தினை பார்க்கிங் படத்தினை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் தான் காமெடியான கதாபாத்திரத்தில் யாரை நடிக்கவைக்கலாம் என்கிற பேச்சுவார்த்தை எழுந்த நிலையில், சிம்பு சந்தானம் சரியாக இருப்பார் என கூறியுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, படத்தை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனம் சந்தானத்தை தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அப்போது சந்தானம் சிம்பு படமா என கேட்டுவிட்டு காமெடியான நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம். அது மட்டுமின்றி காமெடியான நடிக்க எனக்கு சம்மதம் தான் ஆனால், எனக்கு சம்பளமாக 13 கோடி வேணும் அப்படியென்றால் நடிக்கிறேன் என கண்டிஷன் போட்டுள்ளாராம். அதற்கு தயாரிப்பு நிறுவனமும் சம்மதம் தெரிவித்து முன்பணமாக 7 கோடி ரூபாய் கொடுத்து அவரை கமிட் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவல் உறுதியானது என்றால் 10 ஆண்டுகளுக்கு பிறகு காமெடியன் சந்தானத்தை நாம் திரும்பி பார்க்கலாம்.
ஏனென்றால், கடைசியாக வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்தில் தான் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த படத்தை தொடர்ந்து தொடர்ச்சியாக ஹீரோவாக நடித்து வந்த நிலையில், இப்போது மீண்டும் தனது ரூட்டை காமெடி பாதைக்கு மாறியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சிம்புவும், சந்தானமும் இதுவரை மன்மதன், வல்லவன், சிலம்பாட்டம், ஒஸ்தே, வானம், போடா போடி, காளை, வாலு, என பல படங்களில் ஒன்றாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடைய கம்போவும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த கம்போ என்பதால் மீண்டும் இவர்கள் இணையவுள்ள இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்துள்ளனர்.