சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில், அடுத்ததாக சூர்யா 43, வாடிவாசல், உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில், இவர் பாலிவுட் இயக்குனர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
அந்த திரைப்படம் கிட்டத்தட்ட 500 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகவுள்ளதாகவும் படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை ஜான்விகபூர் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில், சூர்யா கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு சுதா கொங்கரா படத்தில் நடிக்கவுள்ளார் என முன்னதாக கூறப்பட்டது.
ஆனால், தற்போது கிடைத்திருக்க கூடிய தகவல் என்னவென்றால், சூர்யா அடுத்ததாக இயக்குனர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் உருவாகவுள்ள ஹிந்தி படத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறாராம். அதன்படி இவர்கள் இணையும் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சூரி ஹீரோவாக நடிக்கும் ‘கருடன்’ படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?
கிட்டத்தட்ட அந்த ஒரு வாரம் மட்டும் தான் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறதாம். காட்சிகள் எல்லாம் சரியாக வருமா தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா? என்று பார்ப்பதற்கு மட்டும் அடுத்த ஒரு வாரம் இந்த படத்திற்கான படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாம்.
அந்த ஒரு வாரத்திற்கு பிறகு சூர்யா சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகவுள்ள தன்னுடைய 43-வது திரைப்படமான சூர்யா 43 படத்தில் நடிக்க தொடங்குவார் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும், விரைவில் சூர்யா ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் நடிக்கவுள்ள படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
இஸ்ரேல் : வடக்கு இஸ்ரேலிய நகரமான சிசேரியாவில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டிற்கு வெளியே பிளாஷ் வெடிகுண்டுகள்…