நடிகை ரகுல் ப்ரீத் சிங்க்கு விரைவில் டும்..டும்..டும்?
தமிழ் சினிமாவில் தீரன் அதிகாரம் ஒன்று, NGK உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவர் தமிழ் சினிமா மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் படங்களிலும் கூட நடித்திருக்கிறார். தற்போது தமிழில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அயலான் படத்தில் நடித்து இருக்கிறார்.
அதைபோல், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியம் 2 படத்திலும் நடித்து வருகிறார். தொடர்ச்சியாக படங்களில் நடித்து கொண்டடு இருக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. ரகுல் ப்ரீத் சிங். பிரபல நடிகரான ஜாக்கி பக்னானியை கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வருகிறார்.
விஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் ! ‘GOAT’ படத்தின் புது அப்டேட்!
குறிப்பாக த்ரிஷா நடிப்பில் வெளியான மோகினி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். ரகுல் ப்ரீத் சிங் ஜாக்கி பக்னானி இருவரும் காதலித்து வருவதை அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துவிட்டார்கள். ஆனால், எப்போது திருமணம் செய்து கொள்ளப்போகிறார்கள் என்பதனை பற்றி அறிவிக்கவில்லை.
இந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் எப்போது திருமணம் நடைபெறப்போகிறது என்ற தகவல் கிடைத்து இருக்கிறது. அதன்படி, ரகுல் ப்ரீத் சிங் ஜாக்கி பக்னானி இருவருக்கும் 2024-ம் ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி, கோவாவில் திருமணம் செய்து கொள்ளஉள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் திருமணம் குறித்த தேதி பற்றியே அறிவிப்பை இருவரும் வெளியிடுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.