புஷ்பா 2 : அல்லு அர்ஜுன் நடிப்பில் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா . படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 15-ஆம் தேதி என அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும் படத்தின் படப்பிடிப்பு முடியவில்லை என்பதால் படத்தின் ரிலீஸ் தேதி டிசம்பருக்கு தள்ளி செல்ல இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தற்போது புஷ்பா 2 படம் குறித்து ஆங்கில இதழ் ஒன்று எழுதியுள்ள செய்தி சமூக வலைதளங்களை அதிர வைத்துள்ளது. அது என்ன செய்தி என்றால், படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் சுகுமார் புஷ்பா கோபத்தில் தனது ஐபோனை வீசி உடைத்த செய்தி தான். இந்த படத்தில் ஒரு முக்கியமான காட்சியை படமாக்கும் பணியில் நடிகர்கள் யாரும் சரியாக நடிக்கவில்லை என்பதால் சுகுமார் மிகவும் கோபமடைந்துவிட்டாராம்.
இதன் காரணமாக தான் கடும் கோபத்தில் இயக்குனர் சுகுமார் போனை உடைத்துவிட்டதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. உண்மையில் இந்த தகவல் பற்றி அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. விரைவில் இதனை பற்றி இயக்குனர் சுகுமார் அல்லது படக்குழு தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த புஷ்பா 2 திரைப்படத்தில் அல்லு அர்ஜூனுடன் இணைந்து ஃபஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா, ஸ்ரீதேஜ், அனசூயா பரத்வாஜ், திவி வத்யா, ஜெகதீஷ் பிரதாப் பண்டாரி, ஜெகபதி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…
மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…
கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள்…
காஞ்சிபுரம்: வருகின்ற ஜன.20ம்தேதி தவெக தலைவர் விஜய், பரந்தூரில் இருக்கும் மக்களை சந்திக்க காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்க்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல்…