நானே வருவேன் திரைப்படத்தின் “ரெண்டு ராஜா” பாடல் வெளியீடு.!
நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “நானே வருவேன்”. வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க , படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
படத்திலிருந்து வெளியான “வீரா சுரா” எனும் முதல் பாடல் மற்றும் டீசர் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், நாளை காலை 10.50-க்கு இரண்டாவது பாடல் வெளியாகும் என நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படியுங்களேன்- இந்த படம் பார்த்த பிறகு வெளிநாட்டு தொடர்களை பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.! இசை புயல் நெகிழ்ச்சி.!
அதன்படி, தற்போது அந்த பாடல் வெளியாகியுள்ளது. “ரெண்டு ராஜா” என தொடங்கும் இந்த பாடலை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும், நடிகர் தனுசும் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடலை நடிகர் தனுஷே எழுதியுள்ளார்.
மேலும் நானே வருவேன் திரைப்படம் வரும் செப்டம்பர் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ் – செல்வராகவன்- யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி இணைந்துள்ளதால் இந்த படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது.
#RenduRaaja the 2nd single from #NaaneVaruvean is here! Hope you all enjoy ????
▶️ https://t.co/154yIKOnLS@dhanushkraja @selvaraghavan @theVcreations @saregamasouth pic.twitter.com/HZJXtId4Rd— Raja yuvan (@thisisysr) September 24, 2022