ரீமேக் படம்… வேண்டவே வேண்டாம்..’பத்து தல’ படத்தை நிகாரித்த ரஜினிகாந்த்.?
நடிகர் சிம்பு தற்போது இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள பத்து தல எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க, படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார்.
இந்த பத்து தல திரைப்படம் கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான மஃப்டி படத்தினுடைய ரீமேக் தான்.கன்னடத்தில் படம் பெரிய ஹிட் ஆனது என்பதால் படத்தை தமிழிலும் எடுக்கலாம் என திட்டமிட்டு சிம்புவை வைத்து கிருஷ்ணா இயக்கி இருக்கிறார்.
இந்த நிலையில், பத்து தல திரைப்படத்தில் சிம்புவிற்கு பதிலாக முதலில் நடிக்கவிருந்தவர் குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதன்படி, இந்த திரைப்படத்தில் சிம்புவிற்கு பதிலாக முதலில் நடிக்கவிருந்தது நடிகர் ரஜினிகாந்த் தானாம்.
ஆனால், படம் ரீமேக் படம் என்பதால் ரஜினி தான் நடிக்கவே இல்லை என்று கூறிவிட்டு பத்து தல வாய்ப்பை நிகரித்துவிட்டாராம். பிறகு படத்தில் சிம்பு நடிக்க ஒப்புக்கொண்டாராம். மேலும் பத்து தல திரைப்படம் வரும் மார்ச் 31-ஆம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.