யோகிபாபுவின் “பன்னிக்குட்டி” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வளம் வருபவர் யோகி பாபு. இவர் தற்போது மெடிக்கல் மிராக்கல், காபி வித் காதல், பன்னிக்குட்டி, ஜவான் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இதில் பன்னிக்குட்டி படத்தை சூழல் என்ற வெப் சீரியஸை இயக்கிய அனுசரண் முருகையன் இயக்கியுள்ளார்.
படத்தில் யோகி பாபு முன்னணி கதாபாத்திரத்திலும். சிங்கம் புலி, கருணாகரன், திண்டுக்கல் லியோனி, டி.ஆர் பி கஜேந்திரன், லக்ஷ்மி ப்ரியா, ராமர் , பழைய ஜோக் தங்கதுரை உள்ளிட்ட பல காமெடி பிரபலங்கள் நடித்துள்ளனர்.லைக்கா நிறுவனம் சார்பில் சுபாஷ்கரண் தயாரித்துள்ள இப்படத்திற்கு கிருஷ்ணகுமார் இசையமைத்துள்ளார்.
பன்னியை பிடிக்கும் கதையை மையமாக வைத்து காமெடி கலந்த சூப்பர் படமாக இந்த படம் உருவாகியுள்ளது. படத்திற்கான டிரைலர், கடந்த ஆண்டே வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம்.
இரண்டு ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் இருந்த இந்த படம் எப்போது தான் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது அதற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, படம் வரும் ஜூலை 8 -ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என லைக்கா நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் தற்போது உற்சாகத்தில் உள்ளனர்.
She’s coming ???? to meet you all. #PanniKutty ???? releasing at screens near you on July 8th ????️
✨ @iYogiBabu #Karunakaran #Ramar @thangadurai123 | ???? @AnucharanM | ???? @K_RiverRecords | ???? @supertalkies @sameerbr | ???? @onlynikil | ???????????? @KannadasanDKD @dindigulleoni @sathishmuru2232 pic.twitter.com/NgFQmWAgxL
— Anucharan Murugaiyan (@AnucharanM) June 24, 2022