ஏஜிஆர் என்ட்ரி… ‘பத்து தல’ ரிலீஸ் தேதி அறிவிப்பு…! கொண்டாட்டத்தில் சிம்பு ரசிகர்கள்…!

Published by
பால முருகன்

நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றியை தொடர்ந்து “பத்து தல” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நெடுஞ்சாலை படத்தை  இயக்கிய கிருஷ்ணா இயக்குகிறார். படத்தில் கெளதம் கார்த்தி, பிரியா பவானி சங்கர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

Pathu Thala STR
Pathu Thala STR [Image Source: Twitter ]

படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படம் இதற்கு முன்பு  கன்னடத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற  “முஃப்தி” படத்தின் தமிழ் ரீமேக்.

இதையும் படியுங்களேன்- என்னோட படத்தில் அந்த மாதிரி காட்சிகள் இருக்காது…நயன்தாரா கணவர் விக்னேஷ் சிவன் பெருமிதம்.!

படத்தில் சிம்பு எ.ஜி.ஆர். எனும் டான் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் முன்னதாக இந்த திரைப்படம் இந்த மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பிறகு சில காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இதனையடுத்து, புத்தாண்டு தினத்தை முன்னிட்டு  படத்தின் புதிய ரிலீஸ் தேதி இன்று அறிவிக்கப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.

STR Pathu Thala [Image Source: Twitter ]

அதன்படி, தற்போது படத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஸ்டுடியோ கிரீன் ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இதனால், ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்துடன் உள்ளனர்.

Published by
பால முருகன்

Recent Posts

காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசின் ஐடியா.! வீதி வீதியாய் வரும் வாகனம்…

டெல்லி :  தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…

3 mins ago

ஐபிஎல் 2025 : கேப்டன் பொறுப்பிலிருந்து வெளியேறுகிறார் ‘ரிஷப் பண்ட்’? காரணம் இதுதான்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…

24 mins ago

துலாபார வழிபாடும் அதன் பலன்களும் ..!

சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…

28 mins ago

ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்.! தவெக தொண்டர்களுக்கு அரசியல் பயிலகம் தொடக்கம்…

சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…

42 mins ago

கிடு கிடு உயர்வு! 58,000-த்தை நெருங்கும் தங்கம் விலை!

சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…

54 mins ago

பருப்பு விவகாரம்., “பாஜகவின் ஆதாரமற்ற குற்றசாட்டு.!” தமிழக அரசு வெளியிட்ட விளக்க அறிக்கை..,

சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…

1 hour ago