நடிகர் விஜயின் சர்கார் விவகாரம் தொடர்பாக பட தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ், தென்னிந்திய கதை ஆசிரியர்கள் சங்கத்துக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நடிகர் விஜய், நடிகை கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘சர்கார்’ என்ற திரைப்படம், தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்த படத்தை கதை, வசனம் எழுதி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார்.
இந்த படத்துக்கு எதிராகவும், படத்தை வெளியிட தடை கேட்டும் வழக்கு தொடரப்படும் என்ற தகவல் கடந்த சில நாட்களாக உலாவியது. இதையடுத்து, தங்கள் கருத்தை கேட்காமல், இந்த படத்துக்கு தடை விதிக்கக்கூடாது என்று ‘சர்கார்’ படத்தை தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில், சென்னை ஐகோர்ட்டில் ‘கேவியட்’ மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.தடை வேண்டும் .
இந்த நிலையில், ‘சர்கார்’ படத்தின் கதை, திரைக்கதை தன்னுடையது என்றும், ‘சர்கார்’ படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் வருண் என்ற ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த வழக்கு மனுவில், ‘செங்கோல்’ என்ற தலைப்பில் நான் கதை எழுதினேன். இந்த கதையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளேன். இந்த நிலையில், என்னுடைய கதையை திருடி, ‘சர்கார்’ என்ற தலைப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் படம் இயக்கியுள்ளார். இதுகுறித்து தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் செய்தேன். அந்த சங்கத்தின் தலைவர் கே.பாக்யராஜ், இருதரப்பையும் அழைத்து விசாரித்தார். இறுதியில், இருவரது கதையும், ஒரே கதை தான் என்று உத்தரவிட்டுள்ளார். எனவே, ‘சர்கார்’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். அந்த படத்தின் கதை என்னுடையது என்று அறிவிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி எம்.சுந்தர் முன்பு மனுதாரர் தரப்பு வக்கீல் எம்.புருஷோத்தமன் முறையிட்டார்.
அதற்கு நீதிபதி, ‘ஏற்கனவே எதிர்தரப்பினர் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளதால், இந்த வழக்கு மனுவை எதிர்தரப்பினருக்கு வழங்கவேண்டும். இந்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) காலை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்’ என்று உத்தரவிட்டார்.
இந்நிலையில் சர்க்கார் படத்துக்கு தடை கோரி தாக்கல் செய்த வழக்கில் அக்டோபர் 30 ஆம் தேதிக்குள் பதிலளிக்க பட தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ், தென்னிந்திய கதை ஆசிரியர்கள் சங்கத்துக்கு சென்னை ஐகோர்ட் நீதிபதி சுந்தர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.அதேபோல் வழக்கு முடியும் வரை சர்கார் திரைப்படத்திற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துவிட்டார்.
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…
சென்னை : அட்லீ இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிவிட்டது என்றாலே அந்த படங்கள் எந்த அளவுக்கு வரவேற்பை பெறுகிறதோ அதே…
சென்னை : திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 2019 நாடாளுமன்ற தேர்தல் முதல் தற்போது வரையில் திமுக கூட்டணியில்…
ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ஆம் தேதி நடைபெறுகிறது. ஏற்கனவே, இரு அணிகளும் 5 போட்டிகள் மோதிக்கொள்ளும்…
தூங்கும்போது குப்புறபடுத்து தூங்குவதால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் பற்றி மருத்துவர்கள் கூறியதை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை…