வீட்டில் போதை பார்ட்டி : பாடகி சுசித்ரா மீது ரீமா கல்லிங்கல் அவதூறு வழக்கு.!
மலையாள நடிகை ரீமா கல்லிங்கல், தமிழ் பாடகி சுசித்ரா மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
கேரளா : மலையாள சினிமாவில் பெண்களுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெறுவதாக ஹேமா கமிட்டி கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், அந்த அறிக்கையில் மலையாள திரையுலகில் பரவலாக போதை பொருட்கள் நடமாடுவதாகவும் கூறியிருந்தது.
ஆனால், போலீசார் இது தொடர்பாக எந்தவித விசாரணையும் மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில், மலையாள நடிகை ரீமா கல்லிங்கல் தனது வீட்டில் அடிக்கடி பார்ட்டி நடத்தியதாகவும், கேரியர் பாதிக்கப்பட்டதற்கு அவர் நடத்திய போதை பார்ட்டிகளே காரணம்.
இதனால் அவர் கைது செய்யப்பட்டதாகவும் தமிழ் பாடகி சுசித்ரா குற்றம் சாட்டியிருந்தார். சுசித்ரா பேசிய அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதோடு, இதுபற்றிய ரீமாவிடம் ஏன் யாரும் கேள்வி எழுப்பவில்லை என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
இதற்கு விளக்கமளிக்கும் வகையில், சுசித்ராவின் கருத்து ஆதாரமற்றது என்றும், அப்படியொரு சம்பவம் நடக்கவில்லை என்றும் ரிமா கல்லிங்கல் தனது சமூக வலைதளங்களில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ” தமிழ் பாடகி சுசித்ரா யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த 30 நிமிட நேர்காணலில் கூறிய கருத்துகள் ஊடகங்களில் வெளியாகின. அதில், 2017 பாலியல் வன்கொடுமையிலிருந்து தப்பியவரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
பகத் போன்ற நடிகர்களின் வாழ்க்கையை ஹேமா கமிட்டி மூலம் அழிக்க முதல்வர் பினராயி விஜயன், மோகன்லால், மம்முட்டி ஆகியோர் சதி செய்ததாகவும் சுசித்ரா குற்றம் சாட்டினார். ஹேமா கமிட்டி எதற்காக அமைக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும்.
அதன் நோக்கத்தை குறைத்து பேசுபவர்களை முக்கியமாக விசாரிக்க வேண்டும். நான் கைது செய்யப்பட்டதாக சில ஊடகங்களில் படித்ததாக அவர் கூறிய ஆதாரமற்ற செய்தி தற்போது தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது.
ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளேன். சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் புகார் அளிக்கப்பட்டு அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன்.
நம் லட்சியத்தில் நம்பிக்கை கொண்ட அனைவருக்கும், இதுவரை எங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி, ஒன்றாக முன்னேறுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram