மனதை வருடும் ரெட்ரோவின் “கண்ணாடி பூவே” பாடல் வெளியீடு.!
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடிக்கும் 'ரெட்ரோ' படத்தின் 'கண்ணாடி பூவே' பாடல் வெளியானது.

சென்னை : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் முதல் பாடலான “கண்ணாடி பூவே” பாடல் வெளியாகியுள்ளது. சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான ‘கங்குவா’ திரைப்படம், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. என்பதால், சூர்யா ரசிகர்கள் ரெட்ரோ மீது அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளனர்.
இந்தப் படத்தில் நாயகி பூஜா ஹெக்டே தவிர ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ் ராஜ், சுஜித் சங்கர், கருணாகரன், பிரேம் குமார், ராமச்சந்திரன் துரைராஜ், சந்தீப் ராஜ், முருகவேல், ரம்யா சுரேஷ் மற்றும் பலர் ரெட்ரோவில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ரெட்ரோ படத்தின் கதை 1980களில் நடப்பதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட படத்தின் டீசர் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது, காதலர் தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் முதல் பாடலான காதல் பீலிங் பாடல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்தப் பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.இந்தப் படத்தை சூர்யா-ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றன. இந்த திரைப்படம் மே 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.