RedinKingsley - Sangeetha [File Image]
நடிகர் ரெடின் கிங்ஸ்லி கடந்த சில ஆண்டுகளாக சீரியல் நடிகை சங்கீதா என்பவரை காதலித்து வந்த நிலையில், கடந்த டிசம்பர் 10-ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். இவர்களுடைய திருமணம் மைசூரில் உள்ள கோயில் ஒன்றில் எளிமையான முறையில் நடைபெற்றது.
திருமணத்திற்கு பிறகு, நடிகை சங்கீதா 2 தாலிகளை கழுத்தில் கட்டியபடி இருக்கிறார். இதனால், இதுகுறித்த கேள்விக்கு அவர் பதில் அளித்திருக்கிறார்.
அதாவது, நடிகர் ரெடின் கிங்க்ஸ்லி கிறிஸ்தவர் என்பதால் கிறிஸ்தவ முறைப்படி சர்ச்சில் தாலி கட்டியதாகவும், சங்கீதாவின் இந்து முறைப்படி கோயிலில் ஒருமுறை திருமணமும் நடைபெற்றிருக்கிறது. ஆகையால் 2 தாலிகள் காத்திருப்பதாக விளக்கம் அளித்துள்ளார்.
ஜாலியாக ஹனிமூனை கொண்டாடும் ரெடின் கிங்ஸ்லி -சங்கீதா ஜோடி!
தற்போது, திருமணம் முடிந்த கையோடு நடிகர் ரெடின் கிங்ஸ்லி தன்னுடைய மனைவி சங்கீதாவுடன் ஹனிமூனை கொண்டாட கிளம்பியுள்ளார். தனது அன்பு மனைவியுடன் ஹனிமூனை கொண்டாடும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோலமாவு கோகிலா படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகர் ரெடின் கிங்ஸ்லி. அதில் தனது நடிப்பின் மூலம் தனக்கென்று ஒரு உடல் பாவனையை வெளிப்படுத்தி மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டார்.
இதனையடுத்து, பீஸ்ட், ஜெயிலர் என பல்வேரு படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிராபி. ரெடின் கிங்ஸ்லி திருமணம் செய்திருக்கும் நடிகை சங்கீதா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் சீரியலில் நடித்து வருவதன் மூலம் பிரபலமானவர்.
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
ராமேஸ்வரம் : ஹெலிகாப்டர் மூலமாக இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு வந்தடைந்த பிரதமர் மோடி, மண்டபத்தில் இருந்து பாம்பன் வரை காரில்…
சென்னை : நேற்று மாலை மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் ஸ்ரீதர் உடல் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக…
சென்னை : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி தோல்வியைத் தழுவியுள்ளது. முதலில்…
நீலகிரி : உதகையில் ரூ.143.69 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து…