வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை தமிழகத்தில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் வாங்கி வெளியீடுகிறது.
படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், படத்தை தயாரித்த தில் ராஜு சமீபத்திய பேட்டி ஒன்றில் ” தமிழ்நாட்டின் நம்பர் 1 ஸ்டாராக நடிகர் விஜய் இருக்கிறார். தமிழகத்தில் துணிவு படத்திற்கு நிகரான திரையரங்கு வாரிசு படத்திற்கு கிடைக்கவில்லை.
இதையும் படியுங்களேன்- போதைப்பொருள் & பணமோசடி வழக்கில் ரகுல் ப்ரீத் சிங்கிற்கு சம்மன்.!
இதனால் தான் சென்னைக்கு சென்று உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பேசவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், நார்த் ஆர்காடு மற்றும் சவுத் ஆர்காடு ஆகிய பகுதிகளில் வாரிசு திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் வெளியிடுவதாக செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும் ஏற்கனவே வாரிசு படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில், வரும் டிசம்பர் 24-ஆம் தேதி பிரமாண்டமாக இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. அதனை தொடர்ந்து படத்தின் டிரைலரும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…