“கோப்ரா” வெளியீட்டு உரிமையை கைப்பற்றி ரெட் ஜெயன்ட்…!
ஜூன் 3-ஆம் தேதி வெளியான விக்ரம் படத்தை ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் கொண்டாடி தீர்த்து விட்டனர். இந்த படத்தை தொடர்ந்து அடுத்தாக விக்ரம் நடித்துள்ள “கோப்ரா” படத்தை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர்.இந்த படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்துள்ளது.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். படத்திலிருந்து வெளியான பாடல் மற்றும் டிரைலர் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், “கோப்ரா” படத்தை தமிழ்நாட்டில் வெளியிடும் உரிமையை உதயநிதிஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்த நிறுவனமே ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ரெட் ஜெயன்ட் நிறுவனம் கடைசியாக வெளியிட்ட விக்ரம், டான் போன்றபடங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்த வசூலை குவித்து லாபத்தை கொடுத்த ரெட்ஜெயன்ட் நிறுவனம் கோப்ரா படத்தை வாங்கியுள்ளது.
இந்த படத்தை தவிர்த்து தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம், கார்த்தி நடித்து வரும் சர்தார் படத்தையும் ரெட்ஜெயன்ட் நிறுவனம் தான் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
Truly excited to collaborate with @7screenstudio once again and bring to you #ChiyaanVikram‘s #Cobra.????
In cinemas from Aug 11th. #CobraFromAugust11 ????@Udhaystalin @AjayGnanamuthu @arrahman @IrfanPathan @SrinidhiShetty7 @SonyMusicSouth @kalaignartv_off @teamaimpr pic.twitter.com/hvyD0KoXKr
— Red Giant Movies (@RedGiantMovies_) June 27, 2022