உண்மையான வெற்றி ஜெய் பீம்.! 67 குடும்பங்களுக்கு பட்டா.! மாஸ் காட்டும் சூர்யா.!

Default Image

விழுப்புரம் மாவட்டத்திலிலுள்ள 67 பழங்குடி இருளர் குடும்பங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி பட்டா வழங்கியுள்ளார் ஆட்சியர் மோகன்.

சூர்யா நடிப்பில் நவம்பர் 2ஆம் தேதி அமேசான் ப்ரைம் OTT தளத்தில் வெளியான திரைப்படம் ஜெய் பீம். சூர்யா முதன் முதலாக வக்கீலாக இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார். உண்மையான சம்பவங்களை மையமாக கொண்டு இந்த திரைப்படத்தை T.J.ஞானவேல் இயக்கி இருந்தார். ஜோதிகா மற்றும் சூர்யா இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்து இருந்தனர்.

சூர்யா உடன், மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ், ராஜீஷா விஜயன் என பலர் நடித்து இருந்தனர். அதிலும், பழங்குடியின இருளர் மக்களாக நடித்து இருந்த மணிகண்டன், லிஜோமோல் நடிப்பு மொழிகள் கடந்து பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது. பழங்குடியின இருளர் மக்கள் தங்களது அடிப்படை உரிமைகளுக்காக எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள், சாமானியனுக்கு கிடைக்க வேண்டிய நீதி எப்படி போராடி பெற வேண்டியுள்ளது என படத்தை உயிரோட்டமாக படத்தை இயக்கியிருந்தார் இயக்குனர் ஞானவேல்.

இந்த திரைப்படம் வெளியாகி பலத்த பாராட்டுகளை பெற்றுவரும் நிலையில், இந்த படத்தில் வருவது போல அடிப்படை வசதிகளுக்காக கஷ்டப்படும் பழங்குடி இருளர் மக்களை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டறிந்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் மயிலம், மயிலாடும்பாறை உள்ளிட்ட பகுதிகளில் வாழும் பழங்குடி இருளர் மக்கள் வாழும் பகுதிக்கு ஆட்சியர் மோகன் நேரில் சென்று ஆய்வு நடித்தியுள்ளார். அதில், 67 பழங்குடி இருளர் குடும்பங்களுக்கு பட்டா வழங்க ஆணை பிறப்பித்துள்ளார்.

ஒரு படத்தின் வெற்றி எவ்வளவு வசூல் பெற்றுள்ளது என்பதை பொறுத்து முடிவு செய்யப்படும். சில படங்கள் எவ்வளவு விருதுகளை பெற்றது என்பது பொறுத்து நிர்ணயம் செய்யப்படும். ஆனால், ஜெய் பீம் போன்ற சில படங்களே திரையில் பேசியதை நிஜத்தில் நிகழ்த்திக்காட்டி உண்மையான வெற்றியை பதிவு செய்யும். அப்படிப்பட்ட உண்மையான வெற்றியை கொடுத்த இயக்குனர் ஞானவேல் மற்றும் தயாரிப்பாளர் ஜோதிகா – சூர்யாவுக்கும் வாழ்த்துக்கள் இன்னும் குவியும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்