Pushpa 3 Release Date : புஷ்பா 2 பாத்தாச்சு 3 பார்க்க ரெடியா! ரிலீஸ் தேதி இது தான்!

புஷ்பா 3 படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க இன்னும் சில ஆண்டுகள் ஆகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

pushpa 3

சென்னை : புஷ்பா 2 திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிபெற்றுள்ளது என்றே சொல்லலாம். படம் வெளியாவதற்கு முன்பு முதல் பாகம் அளவுக்கு நல்ல படத்தை இயக்குனர் கொடுத்திருக்கிறாரா? என எதிர்பார்ப்புடன் காத்திருந்த நிலையில் எதிர்பார்ப்புகளை எல்லாம் பூர்த்தி செய்யும் விதமாக தரமான படத்தை இயக்குநர் கொடுத்துள்ளார்.

படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 175 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தை போல இரண்டாவது பாகத்திற்கும் அமோக வரவேற்பு கிடைத்து வருவதால் மூன்றாவது பாகத்தின் மீதும் எதிர்பார்ப்புகள் அதிகமாக எழுந்துள்ளது. ஏற்கனவே, புஷ்பா 2 படம் வெளியாவதற்கு முன்பே புஷ்பா 3 உருவாகும் என அறிவிக்கப்பட்டு விட்டது.

எனவே, புஷ்பா 3 திரைப்படம் எப்போது வெளியாகும்? என ரசிகர்கள் அதனுடைய ரிலீஸ் தேதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த சுழலில், தற்போது புஷ்பா 3 படத்தின் ரிலீஸ் தேதி குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, படம் வரும் 2028 அல்லது 2029-ஆம் ஆண்டு வெளியாக வாய்ப்பு இருப்பதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

புஷ்பா 1 படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் கழித்து தான் அதனுடைய அடுத்த பாகம் வெளியாகியுள்ளது. ஆனால், அதற்கு அடுத்த பாகம் வெளியாக 4 ஆண்டுகளுக்கு மேல் நேரம் ஆக முக்கிய காரணமே அல்லு அர்ஜுன் அடுத்ததாக சில படங்களில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். எனவே, அந்த படங்களில் நடித்து முடித்த பிறகு தான் அவர் புஷ்பா 3-யில் நடிப்பார் என கூறப்படுகிறது. புஷ்பா 2 இன்னும் பெரிய அளவில் வெற்றி பெற்ற பிறகு 3-வது பாகம் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்