வயிறு குலுங்க சிரிக்க ரெடியா? உருவாகிறது ‘தமிழ்ப்படம் 3’…கிளைமாக்ஸ் இது தான்!
தமிழ் சினிமாவில் எத்தனையோ நகைச்சுவை படங்கள் வெளியாகி இருந்தாலும் மிர்ச்சி சிவா, சதீஸ் ஆகியோர் நடிப்பில் வெளியான ‘தமிழ்படம்’ திரைப்படத்திற்கு என்று ரசிகர்கள் கூட்டமே உள்ளது என்றே கூறலாம். அந்த அளவிற்கு இந்த திரைப்படம் ரசிகர்களை வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைத்தது. இந்த திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியானது.
முதல் பாகம் மக்களுக்கு மத்தியில் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக 8-ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் படத்தின் இரண்டாவது பாகம் திரையரங்குகளில் வெளியானது. முதல் பாகத்திற்கு என்ற அளவிற்கு வரவேற்பு கிடைத்ததோ அதே போலவே, இரண்டாவது பாகத்திற்கும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.
இந்த நிலையில், இந்த இரண்டு பாகங்கள் வெற்றியை தொடர்ந்து தமிழ் படத்தின் 3-வது பாகமும் உருவாகவுள்ளதாம். அந்த மூன்றாவது பாகம் இதுவரை இல்லாத அளவிற்கு இரண்டு பாகங்களை மிஞ்சும் அளவிற்கு காமெடி காட்சிகளை வைத்து எடுக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. படத்திற்கான கதையை இயக்குனர் சி.எஸ்.அமுதன் சிவா மற்றும் சதிஷ் ஆகியோரிடம் கூறிவிட்டாராம்.
அவர்களுக்கும் படத்தின் கதை மிகவும் பிடித்து போக படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டார்களாம். இதனையடுத்து, விரைவில் இந்த திரைப்படம் தொடங்கவும் இருக்கிறதாம். இந்த நிலையில், தமிழ்ப்படம் 3 கிளைமாக்ஸ் காட்சி குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழ்ப்படம் 3 கிளைமாக்ஸ் காட்சியில் நடிகர் சதிஷ் மற்றும் நடிகர் சிவாவும் ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்றிருந்த நாட்டு நாட்டு பாடலுக்கு நடனம் ஆடுவது போல காட்சி இடம்பெறவுள்ளதாம்.
ஏற்கனவே, இவர்கள் இருவரும் தமிழ் படங்களின் இரண்டு பாகங்களிலும் நடனம் ஆடிய காட்சிகள் மக்களை வெகுவாக சிரிக்க வைத்தது என்றே சொல்லவேண்டும். அதைப்போலவே, தமிழ்ப்பாடம் 3 -யில் நடனம் காட்சி இருப்பதாக வெளியான தகவல் ரசிகர்களை உற்சாக படுத்தியுள்ளது. தமிழ்ப்படம் 3 உருவாகும் தகவலையும், படத்தின் கிளைமாக்ஸ் காட்சி பற்றிய தகவலை நடிகர் சதிஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.